ETV Bharat / state

நண்பகல் 1 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 1 pM - செய்தி சுருக்கம்

ஈடிவி பாரத்தின் மதியம் ஒரு மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

TOP 10 NEWS @ 1 pM
TOP 10 NEWS @ 1 pM
author img

By

Published : Oct 14, 2021, 1:33 PM IST

1. ஆயுத பூஜை: 2 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்குப் பயணம்

தமிழ்நாட்டில் இன்று (அக். 14) ஆயுத பூஜை கொண்டாடப்பட்டுவரும் நிலையில் விடுமுறைக்காக சென்னையிலிருந்து சுமார் இரண்டு லட்சம் பேர் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

2. ஜெ. நினைவிடம் செல்ல நாள் குறித்த சசிகலா!

நாளை மறுநாள் (அக். 16) மெரினாவில் உள்ள ஜெயலலிதா, எம்ஜிஆர், அண்ணா நினைவிடங்களுக்குச் செல்ல சசிகலா திட்டமிட்டுள்ளதால், காவல் துறை பாதுகாப்பு கேட்டு காவல் ஆணையர் அலுவலகத்தில் சசிகலா தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

3. அமைச்சர் அன்பில் மகேஷ் திருப்பதியில் சாமி தரிசனம்

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், திருமலை திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் சாமி தரிசனம் செய்தார்.

4. நாட்டில் புதிதாக 18,987 பேருக்கு கரோனா

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 18 ஆயிரத்து 987 பேர் கரோனா தொற்றால் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

5. திருப்பதி பிரம்மோற்சவம்: பக்தர்களுக்கு அருள்பாலித்த ஏழுமலையான்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் நடைபெறும் பிரம்மோற்சவம் விழா நடைபெற்றுவருகிறது.

6.கூடுதல் நேரம் ரேஷன் கடைகளைத் திறக்க உத்தரவு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 1ஆம் தேதிமுதல் 3ஆம் தேதிவரை மூன்று நாள்கள் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் தட்டுப்பாடின்றி வழங்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

7. மாணவனை காலால் உதைத்து தாக்கிய ஆசிரியர்: வைரலாகும் காணொலி

சிதம்பரத்தில் ஆசிரியர் மாணவனை காலால் உதைத்தும், பிரம்பால் அடிக்கும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

8. திருவனந்தபுரம் விமான நிலையம் இனி அதானி குழுமத்தின் வசம்!

திருவனந்தபுரம் விமான நிலையம் குத்தகைக்குவிடப்பட்டு, அதானி குழுமத்திடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

9.மன்மோகன் சிங் விரைவில் குணமடைய பிரதமர் வாழ்த்து

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் விரைவாக குணமடைந்து உடல்நலம் முன்னேற்றமடைய வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி விருப்பம் தெரிவித்துள்ளார்.

10.'அண்ணாத்த' டீசர்: கொண்டாட்டத்தைத் தொடங்கிய ரசிகர்கள்

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 'அண்ணாத்த' படத்தின் டீசர் இன்று (அக். 14) மாலை வெளியாகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.