ETV Bharat / state

மதியம் 1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @1pm - ஈடிவி பாரத் செய்தி

ஈடிவி பாரத் தமிழ் மதியம் 1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @1pm.

1pm
1pm
author img

By

Published : Apr 29, 2021, 12:58 PM IST

1.மே 1, 2ஆம் தேதிகளில் முழு ஊரடங்கா?

சென்னை: பொதுமுடக்கம் நீட்டிப்பது,மே 1, 2 ஆகிய தேதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவது தொடர்பாக தமிழ்நாடு தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் எட்டு மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திவருகிறார்.

2.சென்னை வந்தடைந்த 3 லட்சம் தவணை கோவிஷீல்டு தடுப்பூசிகள்!

சென்னை: மும்பையிலிருந்து மூன்று லட்சம் தவணை கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தன.

3.விஜயவாடாவில் போலி ரெம்டெசிவிர் தடுப்பூசி விற்பனை: இருவர் கைது!

ஆந்திரா: விஜயவாடாவில் போலி ரெம்டெசிவிர் தடுப்பூசியை விற்பனை செய்த இருவரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

4. கட்டுப்பாடுகளுடன் நடந்த வைத்தீஸ்வரன் கோயில் குடமுழுக்கு

மயிலாடுதுறை: கரோனா கட்டுப்பாடுகளுடன் 23 ஆண்டுகளுக்குப் பிறகு வைத்தீஸ்வரன் கோயிலில் குடமுழுக்கு திருவிழா நடைபெற்றது.

5. இந்தியாவிற்கு ஆக்சிஜன் வழங்கி உதவிய அயர்லாந்து

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும்விதமாக இந்தியாவிற்கு ஆக்சிஜனை வழங்கி அயர்லாந்து உதவியது.

6.எஞ்சாய் எஞ்சாமி பாடல் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல் துறையினர்

கேரளா: எஞ்சாய் எஞ்சாமி பாடலை ரீமேக் செய்து காவல் துறையினர் சாலையில் நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

7.இறுதிகட்ட வாக்குப்பதிவு: மேற்கு வங்கத்தில் வெடிகுண்டு வீச்சு

மேற்கு வங்கத்தில் இறுதிகட்ட வாக்குப்பதிவு நடைபெற்றவரும் நிலையில் அங்குள்ள மகாஜதி சதான் அரங்கம் அருகே வெடிகுண்டு வீசப்பட்டது.

8.அஸ்ஸாமில் நிலநடுக்கம்

அஸ்ஸாமில் இன்று (ஏப்ரல் 29) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.7 ஆகப் பதிவானது.

9. கரோனா இல்லைனு சான்றிதழா... இல்ல முகவர்கள் பட்டியலா - கேள்வியெழுப்பும் மம்தா

கரோனா இல்லை என்று 48 மணிநேரத்திற்கு முன்பாக மே 2ஆம் தேதி வாக்கு எண்ணும் மையத்திற்குச் செல்லும் கட்சி முகவர்கள் சான்றிதழ் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ள அதே தேர்தல் ஆணையம்தான், ஏப்ரல் 29ஆம் தேதியன்று முகவர்களின் இறுதிப் பட்டியலை அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளது எப்படி சாத்தியமாகும் என திருணமூல் காங்கிரஸ் கட்சி கேள்வியெழுப்பியுள்ளது.

10.ஆக்சிஜன் செறிவூட்டிகள் கொடுத்து உதவிய ரஜினி பட வில்லன்!

மும்பை: கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும்விதமாக நடிகர் சுனில் ஷெட்டி ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.