ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1PM - 1 மணி செய்திச்சுருக்கம்

ஈடிவி பாரத்தின் பிற்பகல் 1 மணி செய்திச்சுருக்கம்

top 10 news at 1 pm
1 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @ 1PM
author img

By

Published : Mar 20, 2021, 12:59 PM IST

ராஜ்நாத் சிங்- லாயிட் ஆஸ்டின் இன்று சந்திப்பு!

பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டினை இன்று (மார்ச் 20) சந்தித்து பேசுகிறார்.

2 ஆயிரம் விழுக்காடு அதிகரித்த திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ சொத்து!

கடந்த 5 ஆண்டில் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவரின் சொத்து 2 ஆயிரம் விழுக்காடு அதிகரித்துள்ளது.

பாஜக தேர்தல் பணிக்காக 4 கர்நாடக அமைச்சர்கள் நியமனம்!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளில், தேர்தல் பணி செய்வதற்காக, கர்நாடக மாநிலத்தை சார்ந்த 4 அமைச்சர்கள் நியமிக்கபட்டுள்ளனர்.

என் வெற்றி மீது நம்பிக்கை உள்ளது - நடிகை குஷ்பு

சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் குஷ்பு சுந்தர், தனது வெற்றியின் மீது நம்பிக்கை உள்ளதாகத் தேர்தல் பரப்புரையின்போது தெரிவித்துள்ளார்.

ஸ்ரீநகரில் ஃபர்ஸ்ட் நைட் விமானத்தை இயக்கிய கோஏர்!

ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து டெல்லிக்கு முதல் இரவு விமானம் நேற்றிரவு 7.15 மணியளவில் இயக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் பெஞ்சமினுக்கு 108 தேங்காய் உடைத்து உற்சாக வரவேற்பு!

மதுரவாயல் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் பெஞ்சமின் வாக்கு சேகரிக்க வந்தபோது தொண்டர்கள், பொதுமக்கள் 108 தேங்காய் உடைத்து மலர்த்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சதாப்தி விரைவு ரயிலில் மீண்டும் தீ விபத்து!

சதாப்தி விரைவு ரயிலில் லக்கேஜ் வேனிலிருந்து திடீரென புகை வரத் தொடங்கியதையடுத்து, அப்பெட்டியை அவசர அவசரமாக ரயில்வே துறை அலுவலர்கள் கழற்றிவிட்டனர்.

மாணவிக்குத் தாலி கட்டிய இளைஞர்... வீடியோ வைரலானதால் ஓராண்டிற்குப் பிறகு கைது!

குன்னூரில் பள்ளி மாணவிக்கு இளைஞர் ஒருவர், தாலி கட்டிய காணொலி ஓராண்டிற்குப் பிறகு வைரல் ஆனதை தொடர்ந்து, அந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

‘நடப்பது அனைத்தும் அதிசயம் போல் உள்ளது’ - ஜஸ்பிரித் பும்ரா

சமீபத்தில் திருமணமான இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மனைவி சஞ்சனா கணேசனுடன் இருக்கும் க்யூட்டான சில புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

மியாமி ஓபன் தொடரிலிருந்து ஜோகோவிச் விலகல்!

உலகின் முன்னணி டென்னிஸ் வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், கரோனா வைரஸ் (தீநுண்மி) கட்டுப்பாட்டு நெறிமுறைகள் காரணமாக தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.