ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 NEWS @ 1PM - செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம்...

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1PM

author img

By

Published : Feb 15, 2021, 12:53 PM IST

1.அயோத்திக்கு கிடைத்த பரதனைப்போல் தமிழ்நாட்டிற்கு கிடைத்த ஓபிஎஸ் - அதிமுகவில் வெடிக்கும் சர்ச்சை

சென்னை: தமிழ்நாட்டின் துணை முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம், தன்னை 'பரதன்' போல என்று பெருமையாக சுட்டிக்காட்டிய மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வார்த்தைகளை எடுத்துக்கூறி நாளிதழில் விளம்பரப்படுத்தியிருந்தது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

2. ஜெ. பிறந்த நாளான பிப்.24இல் அதிமுகவில் விருப்பமனு விநியோகம்!

சென்னை: ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அதிமுகவில் விருப்பமனு விநியோகிக்கப்பட இருப்பதாக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

3. பிரதமர்-பங்காரு அடிகளார் சந்திப்பில் ஏதேனும் பின்னணி உள்ளதா?

அரசு விழாவில் பங்கேற்பதற்காக சென்னை வந்த பிரதமர் மோடி பங்காரு அடிகளாரை சந்தித்ததின் நோக்கம் என்ன, இந்தச் சந்திப்பில் ஏதேனும் பின்னணி உள்ளதா எனப் பல கேள்விகள் எழுந்துள்ளன.

4. மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பயண டோக்கன்கள் விநியோகம்

சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், பயணம் செய்யும் பொருட்டு மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பயண டோக்கன்கள் இன்று (பிப். 15) முதல் விநியோகம் செய்யப்படும் என மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

5. கோவிட்-19 தாக்கம்: வங்கதேசத்தில் பிப். 28 வரை கல்வி நிறுவனங்கள் மூடல்

கோவிட்-19 தாக்கத்தின் காரணமாக வங்கதேசத்தில் பிப்ரவரி 28ஆம் தேதி வரை கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

6.நிலத்தகராறு: தம்பியை கொலைசெய்த சகோதரர்கள் கைது!

கரூர்: குளித்தலை அருகே நிலத்தகராறு காரணமாக தம்பியை கொலைசெய்த சகோதரர்களை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

7.சர்ச்சை வழக்கில் சிக்கிய யுவராஜ்: 6 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு!

கிரிக்கெட் வீரர் யுஷ்வேந்திர சாஹலின் சாதி குறித்து விமர்சித்தது தொடர்பாக அளிக்கப்பட்டப் புகாரில், இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் மீது காவல் துறையினர் ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

8.2ஆவது டெஸ்ட்: மளமளவென சரிந்த விக்கெட்டுகள்; நிலைத்து ஆடும் கோலி, அஸ்வின்!

இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின்போது இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்களை எடுத்துள்ளது.

9.மோடியிடம் 'வலிமை' பட அப்டேட் கேட்ட ரசிகர்கள்!

சென்னை: பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைக்க தமிழ்நாடு வந்த பிரதமர் மோடியிடம் அஜித் ரசிகர்கள் 'வலிமை' பட அப்டேட் கேட்ட காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

10. வாழ்வின் எதார்த்தத்தை சொல்லும் 'பேச்சிலர்'

ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி தயாரிப்பில் ஜி.வி பிரகாஷ் நடித்திருக்கும் 'பேச்சிலர்' படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.