இரண்டு நாள்களில் கோவின் தளத்தில் 'தமிழ்'
சென்னை: பெரும் எதிர்ப்புகளை அடுத்து, இன்னும் இரண்டு தினங்களில் தடுப்பூசிக்காகப் பதிவுசெய்யும் கோவின் தளத்தில் தமிழ் மொழி சேர்க்கப்படும் என ஒன்றிய அரசு சார்ப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
சிறையில் இருந்தே தண்ணிகாட்டிய மெகுல் சோக்ஸி!
பஞ்சாப் நேஷனல் வங்கி மெகா ஊழலில் சிக்கி, வெளிநாட்டுக்கு தப்பியோடிய தொழிலதிபர் மெகுல் சோக்ஸியை நாட்டுக்கு திரும்ப கொண்டுவருவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிறையில் இருந்தபடியே சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் வெளியுறவு அமைச்சக அலுவலர்களுக்கு அவர் தண்ணிகாட்டியுள்ளார்.
'நாட்டில் இரண்டாம் அலை அடங்கிவருகிறது' - ஒன்றிய அரசு
இந்தியாவில் கோவிட்-19 இரண்டாம் அலை உச்ச எண்ணிக்கை, மே 7ஆம் தேதி பதிவான நிலையில், அந்த எண்ணிக்கையிலிருந்து 68 விழுக்காடு வரை பாதிப்பு தற்போது குறைந்துள்ளது.
செம்மொழியான ‘தமிழ்மொழி’ எங்கே? ஒன்றிய அரசிடம் கேள்வியெழுப்பும் சு.வெ!
கரோனா தடுப்பூசி செலுத்த பயன்பாட்டில் உள்ள அரசின் கோவின் தளத்தில் தமிழ் மொழிக்கான தேர்வு ஏன் கொடுக்கப்படவில்லை என மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வியெழுப்பியுள்ளார்.
தென்மாநிலங்களுக்கு ரயில்கள் மூலம் 10 ஆயிரம் மெட்ரிக் டன் விநியோகம்!
டெல்லி: தென் மாநிலங்களுக்கு, இதுவரை ரயில்கள் மூலம் 10 ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இதில், தமிழ்நாட்டிற்கு மட்டும் இதுவரை 2,711 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகிக்கப்பட்டுள்ளன.
பிரபல நடிகைக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதித்த டெல்லி உயர் நீதிமன்றம்!
டெல்லி: 5ஜி தொழில் நுட்பத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என, நடிகை ஜுஹி சாவ்லா தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், அவருக்கு 20 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
பிரபல திரைப்பட இயக்குநரை திருமணம் செய்து கொண்ட யாமி கெளதம்!
மும்பை: நடிகை யாமி கெளதம் பிரபல திரைப்பட இயக்குநரை இன்று (ஜூன் 4) திருமணம் செய்து கொண்டார்.
ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 24x7 பணப் பரிவர்த்தனை சேவை - ரிசர்வ் வங்கி
வாடிக்கையாளர்களின் சேவையை மேம்படுத்தும் விதமாக, வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் ஆர்டிஜிஎஸ் பண பரிவர்த்தனை சேவை செயல்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
தனியார்மயமாகும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி?
சென்னை: எந்தெந்த வங்கிகளை தனியார்மயமாக்கலாம் என நிதி ஆயோக் வழங்கிய தரவரிசைப் பட்டியலில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
தனியார் மருத்துவமனைகளுக்கு தரவேண்டிய தொகையை விடுவிக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
கரோனா சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனைகளுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை வழங்கும்படி புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.