ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9PM

author img

By

Published : Jul 25, 2020, 8:55 PM IST

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்.

ஈடிவி பாரத் 9 மணி செய்தி
ஈடிவி பாரத் 9 மணி செய்தி

தமிழ்நாட்டில் 2 லட்சத்தைக் கடந்த கரோனா பாதிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 6,998 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 6 ஆயிரத்து 737ஆக அதிகரித்துள்ளது.

கால்நடை மருத்துவம் படிக்க மாணவர்கள் ஆர்வம் - அமைச்சர் ராதாகிருஷ்ணன்

கோயம்புத்தூர்: பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் தலைவாசல் பகுதியில் தொடங்கவுள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு அதிக விருப்பம் காட்டி வருவதாக கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஜெ. அன்பழகனின் மகன் ராஜா அன்பழகனுக்கு புதிய பொறுப்பு!

சென்னை: சென்னை மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளராக மறைந்த ஜெ. அன்பழகனின் மகன் ராஜா அன்பழகனை நியமித்து திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கோயில் நிலம் ஆக்கிரமிப்பு வழக்கு: இந்து சமய அறநிலையத் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

சென்னை: சேலத்தில் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது தொடர்பாக நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'சோதனையும் இல்லை, கரோனாவும் இல்லை'- பாஜகவைத் தாக்கும் பிரியங்கா!

லக்னோ: பாஜக அரசு மக்களுக்கு கரோனா பரிசோதனையை மேற்கொள்ளாமலேயே மக்கள் எவ்வித நோய்த் தாக்குதலுக்கும் உள்ளாகாதபடி நடவடிக்கை எடுத்துவருவதாக விளம்பரம் செய்கிறது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

மக்களின் தனியுரிமை தகவல்களை பாதுகாக்க தனிப்பட்ட ‘தரவு பாதுகாப்புச் சட்டம்’

டிஜிட்டல் தளங்கள் நம்பகத்தன்மையோடு செயல்பட வேண்டும் என்று சீனாவின் பெயரைக் குறிப்பிடாமல் ஜி-20 நாடுகள் சந்திப்பில், இந்தியா சுட்டிக்காட்டியது. சீனாவின் செயலிகளுக்கு இந்தியா தடை விதித்ததை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பாம்பியோ வரவேற்றுள்ளார்.

கரோனா மருந்து: மிதமான கரோனா சிகிச்சைக்கு, குறைந்த விலையில் மருந்து!

டெல்லி: மிதமான கரோனா சிகிச்சைக்கு பயன்படும் ஃபவிபிராவிர் மருந்தை ஜென்பர்க் நிறுவனம் 39 ரூபாயில் அறிமுகப்படுத்தியுள்ளது.

கரோனா காலங்களில் மட்டும் 18 லட்ச மனுக்களை பெற்ற இந்திய நீதிமன்றங்கள்!

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் மாதம் கொண்டுவரப்பட்ட பொது முடக்க காலத்திலிருந்து ஜூலை வரை 18 லட்சம் மனுக்கள் நாடு முழுவதும் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்று உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

ராம்கோபால் வர்மாவின் அலுவலகத்தை அடித்து நொறுக்கிய 'பவர்ஸ்டார்' ரசிகர்கள்

ஹைதராபாத்: இயக்குநர் ராம்கோபால் வர்மாவின் 'பவர்ஸ்டார்' படத்தால் ஆத்திரமடைந்த பவன் கல்யாண் ரசிகர்கள் ராம்கோபால் வர்மாவின் அலுவலகத்தை அடித்து நொறுக்கியுள்ளனர்.

ஐபிஎல் தொடருக்கு முன் தென் ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் தொடர்?

ஐபிஎல் தொடருக்கு முன் வருகிற செப்டம்பர் மாதத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக கிரிக்கெட் தொடரை நடத்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.