ETV Bharat / state

காலை 9 மணி செய்திச் சுருக்கம்- Top 10 news @ 9am - உதயநிதி ஸ்டாலின்

ஈடிவி பாரத்தின் காலை 9 செய்திச் சுருக்கம்..

செய்திச் சுருக்கம்
TOP 10 NEWS 9 AM
author img

By

Published : May 11, 2021, 9:10 AM IST

'என் நேர்மையை சந்தேகிப்பவர்களை சும்மா விடமாட்டேன்‌' - கமல் ஆவேசம்

சென்னை: என் நேர்மையை சந்தேகிப்பவர்களை நான் சும்மா விடமாட்டேன்‌ என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மருத்துவர் வேல் முருகேந்திரனிடம் வாழ்த்து பெற்ற உதயநிதி ஸ்டாலின்!

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் மருத்துவர் வேல் முருகேந்திரனைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

ரெம்டெசிவிர் மருந்தை கள்ளத்தனமாக விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும்!

திருச்சி: ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் திவ்ய தர்ஷினி தெரிவித்துள்ளார்.

'தமிழ்நாட்டில் விரைவில் ஆக்ஸிஜன் உற்பத்தி தொடங்கப்படும்' - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

திருவள்ளூர்: தமிழ்நாடு முழுவதும் 142 இடங்களில் ஆக்ஸிஜன் உற்பத்தி விரைவில் தொடங்கப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கரோனா பாதிப்பால் திரைப்பட தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகர் மறைவு!

சேலம்: கஜினி, சுள்ளான் உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களைத் தயாரித்தவர் சேலம் சந்திரசேகரன். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த இவர் நேற்று (மே.10) நள்ளிரவில் உயிரிழந்தார்.

புதுச்சேரியில் ஆம்புலன்ஸ், இறுதி ஊர்வல வாகனங்களுக்கான கட்டணம் நிர்ணயம்!

புதுச்சேரி: ஆம்புலன்ஸ், இறுதி ஊர்வல வாகனங்களுக்கான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், அதை விட அதிக தொகை வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

நடைபாதையில் கார் ஏறி விபத்து: ஆதரவற்ற பெண் உயிரிழப்பு!

சென்னை: நடைபாதையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த பெண் மீது கார் ஏறி நடந்த விபத்தில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஆட்டோ ஓட்டுநர்!

சென்னை: தலை, கை, கால் பகுதிகளில் வெட்டுக் காயங்களுடன் உயர் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு மருத்துவமனை நிர்வாகம் சிகிச்சை அளிக்காமல் அலைக்கழிப்பதாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரி மக்களுக்கு 'ஷாக்' கொடுத்த மின்துறை

புதுச்சேரி: 2021-22 ஆம் ஆண்டுக்கான மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இந்த மின் கட்டணம் உயர்வானது கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக மின்துறை தெரிவித்துள்ளது.

5 நிமிட தாமதத்தால் பறிபோன 11 உயிர்கள்: திருப்பதியில் சோகம்!

அமராவதி: திருப்பதி அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக 11 கரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.