ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 AM - top 10 news etv bharat tamil

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம் இதோ...

top-10-news-9-am
top-10-news-9-am
author img

By

Published : Jun 22, 2020, 8:57 AM IST

நொய்டா 50ஆவது செக்டார் மெட்ரோ ரயில் நிலையம் திருநங்கைகளுக்கு அர்ப்பணிப்பு!

நொய்டா: நொய்டா 50ஆவது செக்டார் மெட்ரோ ரயில் நிலையம் திருநங்கைகளுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. இங்கு முழுக்க முழுக்க திருநங்கைகளே பணியமர்த்தப்பட உள்ளனர்.

காஷ்மீரில் 24 மணி நேரத்தில் நான்கு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இருவேறு பகுதிகளில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்திய போர்க்கப்பலில், மாலத்தீவிலிருந்து தூத்துக்குடி திரும்பும் 198 பயணிகள்!

டெல்லி : கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக மாலத்தீவில் சிக்கியிருந்த 198 இந்தியர்களுடன் ஐ.என்.எஸ்., ஐராவட் கப்பல் தூத்துக்குடியை நோக்கி நேற்று தன் பயணத்தைத் தொடங்கியது.

10% இடஒதுக்கீடு விவகாரம்: அதிமுகவை சாடும் பாஜக!

டெல்லி: பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10 விழுக்காடு இடஒதுக்கீடு விவகாரத்தில் தமிழ்நாடு பாஜக செய்தித் தொடர்பாளர் கே.டி. ராகவன் அதிமுகவை சாடியுள்ளார்.

புதுச்சேரியில் மதியம் 2 மணி வரை மட்டும் கடைகள் இயங்க அனுமதி - முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரி: புதுச்சேரியில் வரும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 23) முதல் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே கடைகள் திறந்திருக்க வேண்டும் என முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.

'முழு ஊரடங்கு அறிவித்த மூன்றே நாளில் 10,604 நபர்கள் மீது வழக்குப் பதிவு' - சென்னை காவல் ஆணையர்!

சென்னை: முழு ஊரடங்கு தொடங்கப்பட்டு, மூன்று நாள்களில், ஊரடங்கு வீதிகளை மீறிய 10 ஆயிரத்து 604 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

விஜய் பிறந்தநாளில், 'மாஸ்டர்' போஸ்டர் வெளியீடு

நடிகர் விஜய்யின் பிறந்தநாள் இன்று (ஜூன் 22) கொண்டாடப்படுவதை முன்னிட்டு 'மாஸ்டர்' படக்குழு அவரது போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

டென்னிஸ் வீரர் கிரிகோர் டிமிட்ரோவுக்கு கரோனா!

லண்டன்: பிரபல டென்னிஸ் வீரர் கிரிகோர் டிமிட்ரோவுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனப் பொருள்களின் பட்டியலைக் கோரும் மத்திய அரசு!

டெல்லி: சீனாவிலிருந்து இறக்குமதி செய்யும் அத்தியாவசியப் பொருள்கள், அத்தியாவசியமற்ற பொருள்களின் பட்டியலை மத்திய அரசு கோரியுள்ளது.

கரோனா நெருக்கடி: எச்1 பி விசாவை நிறுத்தி வைக்க திட்டமிடும் ட்ரம்ப்!

கரோனா நோய்க் கிருமி தொற்றால் அமெரிக்கர்கள் பெரும் வேலையிழப்பைச் சந்தித்துள்ளனர். இதனால் எச்1 பி, எச்2 பி, ஜே 1 ஆகிய விசாக்களை நிறுத்திவைக்க ட்ரம்ப் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.