ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7PM

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம் ...

7 மணி செய்திச் சுருக்கம்
7 மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : Jul 3, 2021, 7:04 PM IST

ஐஐடியை எதிர்த்து ஆர்ப்பாட்டம்.. ஜூலை 5இல் கரம் இணைத்திட கோரிக்கை..

பேராசிரியர்கள், மாணவர்கள் மீது தொடரும் சாதியக்கொடுமைகள், ஐஐடியில் முறையாக பின்பற்றப்படாத இட ஒதுக்கீடு முறை ஆகியவற்றை கண்டித்து பல்வேறு அமைப்புகள் ஜூலை 5ஆம் தேதி ஆர்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

மேகேதாட்டு அணை விவகாரம்: மு.க.ஸ்டாலினுக்கு எடியூரப்பா கடிதம்

மேகேதாட்டு அணை கட்டுவது தமிழ்நாட்டை பாதிக்காது என, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா கடிதம் எழுதியுள்ளார்.

கணவர் உடலை உடற்கூராய்வு செய்ய மனைவி மனு!

காதல் கணவன் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் இறந்த கணவரின் உடலை மீண்டும் தோண்டி எடுத்து உடற்கூராய்வு செய்து தனக்கு நியாயம் வழங்க கோரி இளம்பெண் ராணிப்பேட்டை காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

பிளாஸ்டிக்கில் மூழ்கும் எதிர்காலம்!

பிளாஸ்டிக் மாசுபாடு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் 'உலக பிளாஸ்டிக் ஒழிப்பு நாள்' இன்று(ஜூலை.3) அனுசரிக்கப்படுகிறது.

ஜெயலலிதா பெயரில் பல்கலை., தொடர்ந்து நடத்த ஓபிஎஸ் வலியுறுத்தல்!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயரை தாங்கி நிற்கும் பல்கலைக்கழகத்தை தொடர்ந்து நடத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு ஓ. பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இரண்டே நாள்தான்.. 28,000 பேருக்கு செக்

போக்குவரத்து விதிகளை மீறியதாக இரண்டு நாட்களில் ஏ.என்.பி.ஆர் கேமரா மூலம் சிக்கிய 10 ஆயிரத்து 905 வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவல் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சினிமாவைக் கைப்பற்றி, கருத்து சுதந்திரத்தின் உயிர் பறிக்கும் ஒன்றிய அரசு - கமல்ஹாசன்

உச்சநீதிமன்றத்தால் அரசமைப்புக்கு முரணாது என குறிப்பிடப்பட்ட அதிகாரங்களை ஒளிப்பதிவு திருத்த மசோதா மூலம் ஒன்றிய அரசு கைப்பற்ற நினைக்கிறது என கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

பிரசவத்திற்குப் பின் இறந்த பெண்ணுக்கு ரூ.5 லட்சம் வழங்க உத்தரவு

பிரசவத்திற்குப் பிந்தைய ரத்தக் கசிவு, உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ் கிடைக்காததால் இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு, பொது சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் தரப்பில் ஐந்து லட்சம் ரூபாயை இழப்பீடாக எட்டு வாரத்திற்குள் வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

திருமணத்தை நிறுத்திய நடிகை மெஹ்ரீன்

நடிகை மெஹ்ரீன் பிர்சாடாவுக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், தன்னுடைய திருமணம் நடைபெறாது என அறிவித்துள்ளார்.

சிசிடிவி: மும்பை-புனே விரைவு நெடுஞ்சாலையில் கோர விபத்து

மகாராஷ்டிரா: மும்பை-புனே விரைவு நெடுஞ்சாலை கோபோலி அருகே ஜூலை 1ஆம் தேதி மாலை லாரி ஒன்று அசுர வேகத்தில் கார் மீது மோதி விபத்தானது. இந்த விபத்தில் காரில் வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.