ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7PM - பாலியல் புகார்

ஈ டிவி பாரத்தின் இரவு 7 மணி செய்திச் சுருக்கம் இதோ.

TOP 10 NEWS 5 PM
TOP 10 NEWS 5 PM
author img

By

Published : Jun 1, 2021, 6:58 PM IST

கறுப்பு பூஞ்சை சிகிச்சை: ஒன்றிய அரசை கேள்விகளால் துளைக்கும் ராகுல்

கறுப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்காமல் அரசின் வழிமுறைகளில் சிக்கி அலைக்கழிக்க வைப்பது ஏன்? என நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இங்கிலாந்தில் கரோனா தொற்று மூன்றாவது அலை : நிபுணர் எச்சரிக்கை

லண்டன்: இங்கிலாந்தில் கரோனா தொற்றின் மூன்றாவது அலை ஆரம்பக் கட்டத்தில் உள்ளதாக தொற்று நோய் தொடர்பாக அரசுக்கு ஆலோசனைகளை வழங்கி வரும் விஞ்ஞானி ரவி குப்தா எச்சரித்துள்ளார்.

கர்ப்பிணிகள் நலனுக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு மின்விசிறிகள், ஏர்கூலர் வழங்கல்!

திருவள்ளூர்: கர்ப்பிணிகள், குழந்தைகள் நலனுக்காக திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனை மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிறப்புச் சிகிச்சைப் பிரிவிற்காக 20 மின்விசிறிகள், ஏர்கூலர் வழங்கப்பட்டன.

இறைச்சி, முட்டைகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய அனுமதி

கோவை: கோவை மாநகராட்சியில் இறைச்சி, முட்டைகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பாஜக எம்எல்ஏ-வுக்கு அமைச்சர் பதவி கேட்டு போராட்டம்

புதுச்சேரி: பாஜக ஊசுடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருக்கு அமைச்சர் பதவி வழங்க கோரி போராட்டம் நடைபெற்றது.

'கறுப்புப் பூஞ்சையால் தமிழ்நாட்டில் 17 பேர் உயிரிழப்பு'- அமைச்சர் தகவல்

சென்னை: கறுப்புப் பூஞ்சை நோயால் தமிழ்நாட்டில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 518 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருவதாகவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

பாலியல் புகார்: ராஜகோபாலனை 3 நாள்கள் காவலில் விசாரிக்க அனுமதி

சென்னை: பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கைதுசெய்யப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலனை மூன்று நாள்கள் காவல் துறையினர் காவலில் வைத்து விசாரிக்க போக்சோ நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ஆக்சிஜன் 90க்கு கீழ் இருந்தால் மட்டுமே மருத்துவமனையில் கரோனா சிகிச்சை!

சென்னை: ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 90க்கு குறைவாக இருந்தால் மட்டுமே, கரோனா தொற்று நோயாளிகளை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது.

'காவிப்படையை எதிர்ப்பவர்களுக்கு தமிழ்நாடு அரசு உறுதுணையாக இருக்க வேண்டும்'

மருத்துவத்தையும் மருத்துவக் கல்வியையும் காவிமயமாக்க எடுக்கப்படும் முயற்சிகளை எதிர்ப்பவர்களுக்கு தமிழ்நாடு அரசு உறுதுணையாக இருக்கேவண்டும் என, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

ராமநாதபுரத்தில் 500க்கும் மேற்பட்ட காய்ச்சல் கண்டறியும் முகாம்கள்

ராமநாதபுரம்: இதுவரை மொத்தம் 521 காய்ச்சல் கண்டறியும் முகாம்களில், 16 ஆயிரத்து 400 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.