ஆவினில் தோண்டத் தோண்ட ஊழல்கள் - பால்முகவர்கள் சங்கம் குற்றச்சாட்டு!
கடந்த அதிமுக ஆட்சியில், ஆவின் நிறுவனத்தில் அதிகமான ஊழல்கள் நடந்துள்ளதாகவும், முறையான விசாரணை நடத்தினால் தோண்டத் தோண்ட நிறைய ஊழல்கள் வெளியே வரும் எனவும் பால்முகவர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைபெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தனியார் பள்ளிகளில் வறுமைக்கோட்டுக்கீழ் உள்ளவர்கள் நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களின் குழந்தைகளுக்கான 25 விழுக்காடு ஒதுக்கீட்டின்கீழ், 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் உள்ள 1 லட்சத்து 34 ஆயிரத்து 400 இடங்களில் சேர்ப்பதற்கு ஜூலை 5ஆம் தேதி (நாளை) முதல் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
அதிமுகவினருக்கு எதிரான அடக்குமுறையை நிறுத்த வேண்டும் - இபிஎஸ்
ஆட்சி அதிகாரம் கையில் வந்ததும், திமுகவினர் காவல்துறையின் மூலமாக அதிமுகவினருக்கு எதிராக செய்யும் வன்முறையை உனடியாக நிறுத்த வேண்டும் என, எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
11ஆவது திருமணநாளைக் கொண்டாடும் தோனி - சாக்ஷி தம்பதி
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர வீரருமான மகேந்திர சிங் தோனி, அவரின் மனைவி சாக்ஷி இருவரும் தங்களது 11ஆவது திருமண நாளை இன்று (ஜூலை 4) கொண்டாடி வரும் நிலையில், அவர்களுக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வாழ்த்துக்கூறி வருகின்றனர்.
JAMMU KASHMIR: ஸ்ரீநகரில் ட்ரோன் பயன்படுத்தத் தடை
பாதுகாப்புக் காரணங்கள்கருதி ஸ்ரீநகரில் ட்ரோன் பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது
சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு
மாநகராட்சிப் பள்ளியில் இதுவரை 93 ஆயிரத்து 445 மாணவர்கள் சேர்ந்துள்ளதாக சென்னை மாநகராட்சியின் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
சுப்ரமணியபுரம்: துரோக சங்கிலியின் சாட்சி
பரமனைக் கொல்ல உதவி செய்துவிட்டு பணத்தை வாங்கிய காசி, கல்லில் அமர்ந்து பீடி புகையோடு சேர்த்து வெளிவிடும் சுவாசக் காற்றில் துரோக விஷம் அப்பியிருந்தது.
Army Chief: நாட்டின் ராணுவத் தளபதி பிரிட்டன் பயணம்
ராணுவத் தளபதி எம்.எம். நரவனே நான்கு நாள் பயணமாக பிரிட்டன், இத்தாலி ஆகிய நாடுகளுக்கு செல்கிறார்.
'ஒன்றியம்' தவறு - ஓபிஎஸ் தரும் விளக்கம்!
"தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள்" என்று கூறிய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பிறந்த தமிழ்நாட்டில் தேசியத்திற்கு எதிரான செயல்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, தமிழ்நாடு 'திசைமாறி' செல்கிறதோ என்ற எண்ணம் பொதுமக்களிடையே மேலோங்கி நிற்கிறது.