ETV Bharat / state

5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5PM - etv bharat 5 PM news

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச் சுருக்கம்.

ஈடிவி பாரத் 5 மணி செய்தி
ஈடிவி பாரத் 5 மணி செய்தி
author img

By

Published : Jul 25, 2020, 5:02 PM IST

இன்று 81ஆவது பிறந்தநாள்: பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் வாழ்த்து!

சென்னை: பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இருவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

வேதா நிலையம் அரசுடைமையானது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வசித்த வேதா இல்லம் அரசுடைமையாக்கப்பட்டதால் அந்த இடம் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறைக்கு சொந்தமான இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'ரேஷன் கடைகள் மூலம் இலவச மாஸ்க் வழங்கப்படும்' - அமைச்சர் காமராஜ்

திருவாரூர்: கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு சார்பில் ரேஷன் கடைகள் மூலம் இலவசமாக முகக்கவசங்கள் வழங்கப்படும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

பூ விற்கும் குழந்தைகளின் கரங்கள் புத்தகத்தைத் தழுவ நிதி திரட்டிய திமுக எம்பி!

கோயம்புத்தூர்: வறுமையின் கோரப்பிடியில் சாலையில் பூ விற்றுக் கொண்டிருந்த குழந்தைகளுக்காக திமுக எம்பி செந்தில்குமார் 1 லட்சத்து 36 லட்சம் ரூபாய் நிதி திரட்டியுள்ளதாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

'இ-பாஸ் சிரமங்கள் குறித்து முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்படும்'

சென்னை: இ-பாஸ் பெறுவதில் உள்ள சிரமங்கள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்படும் என அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

'நாமக்கல் மருத்துவக் கல்லூரி 2021இல் கட்டிமுடிக்கப்படும்' - அமைச்சர் சரோஜா

நாமக்கல்: 2021ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நாமக்கல் மருத்துவக் கல்லூரி கட்டடப் பணிகள் முடிவடையும் என அமைச்சர் சரோஜா தெரிவித்தார்.

ஆடுகளத்தின் ஈரப்பதத்தை பயன்படுத்தி இங்கிலாந்துக்கு நெருக்கடி அளிப்போம் - கிரேக் பரத்வெய்ட்

மான்செஸ்டர்: ஆடுகளத்தில் ஈரப்பதம் இருந்ததன் காரணமாக கேப்டன் ஹோல்டர் முதலில் பவுலிங் செய்யும் முடிவை தேர்ந்தெடுத்தார் என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க பேட்ஸமேன் கிரேக் பரத்வெய்ட் தெரிவித்துள்ளார்.

காருக்குள் பிக்னிக் - ஜாலி வீடியோவை பகிர்ந்த வனிதா

நடிகை வனிதா தனது கணவர் பீட்டர் பாலுடன் பிக்னிக் சென்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

குறையும் சீன ஸ்மார்ட்போன்கள் மீதான மோகம் - காரணம் என்ன?

டெல்லி: இந்தியாவில் சீன ஸ்மார்ட்போன்களின் இருப்பு ஜூன் மாதத்தில் 81 விழுக்காட்டிலிருந்து 72 விழுக்காடாகக் குறைந்துள்ளதாக கவுண்டர் பாயின்ட் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

புதிய வெளிநாட்டு மாணவர்கள் யாரும் அமெரிக்காவில் நுழைய முடியாது!

வாஷிங்டன்: வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் நுழைய விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்தத் தளர்வுகள் வெளிநாடுகளிலிருந்துவரும் புதிய மாணவர்களுக்கு பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.