11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை: நீலகிரி, கோவை, தருமபுரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
'மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தவே திமுக போராட்டம் நடத்துகிறது' - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
மக்களிடையே பீதியை ஏற்படுத்தவே திமுக போராட்டம் நடத்திவருகிறது என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மறுகூட்டல், மறு மதிப்பீடு அறிவிப்பில் காலதாமதம் - கலக்கத்தில் மாணவர்கள்
சென்னை: 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகி ஒரு வாரமாகியும் மறுகூட்டல், மறு மதிப்பீடு குறித்த அறிவிப்பு வெளியிடப்படாமல் இருப்பது மாணவர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கரோனாவிலிருந்து விடுபடவேண்டி 120 மணி நேரம் தொடர் யாகம்
திருப்பூர்: கரோனா தொற்றிலிருந்து உலக மக்கள் விடுபடவேண்டி போயம்பாளையம் பகுதியிலுள்ள வேட்டையன் சிவபெருமாள் கோயிலில் 120 மணி தொடர் யாகம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கருணாநிதி, ஸ்டாலின் மீது விமர்சனம்; திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
புதுச்சேரி: சட்டப்பேரவை கூட்டத்தில் கருணாநிதியையும் ஸ்டாலினையும் விமர்சித்துப் பேசிய அதிமுக சட்டப்பேரவை உறுப்பினரைக் கண்டிக்காத முதலமைச்சர், அமைச்சர்களைக் கண்டித்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
ராஜஸ்தானில் சிபிஐ விசாரணை நடந்த மாநில அரசின் அனுமதி தேவை!
ராஜஸ்தான் மாநிலத்தில் சிபிஐ (மத்திய புலனாய்வு குழு) விசாரணை நடத்த இனி மாநில அரசின் ஒப்புதல் அவசியம்.
இந்திய அணுசக்தி துறையின் நோக்கங்களும் அதன் சவால்களும்!
அணு உற்பத்தி திறனை அதிகரிக்கும் நோக்கில் இந்தியாவும், சீனாவும் தொடர்ந்து செயலாற்றிவருகின்றன. 2031ஆம் ஆண்டுக்குள் அணு சக்தி திறனை 22,480 மெகா வாட்டாக அதிகரிப்பதை நோக்கமாக இந்தியா கொண்டுள்ளது. ஆனால், இதனை அடைவதில் நிறைய சவால்கள் உள்ளன.
பண்ணை வீட்டில் ஓய்வெடுக்கும் 'அண்ணாத்த'
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேளம்பாக்கத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் ஓய்வெடுத்துவருகிறார்.
உலகக்கோப்பையை யார் நடத்தப் போகிறார்கள்? - ஐசிசி அறிவிப்பால் எழுந்த புதிய குழப்பம்
இந்த ஆண்டு டி20 உலகக்கோப்பை ஒத்திவைக்கப்படுவதாக நேற்று ஐசிசி அறிவித்த நிலையில், அடுத்த ஆண்டு நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பையை யார் நடத்துவார்கள் என்று குழப்பம் ஏற்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு 1.48 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 48 லட்சத்து 57 ஆயிரத்து 296ஆக உயர்ந்துள்ளது.