ETV Bharat / state

5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5PM - top 10 news etv bharat tamil

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச் சுருக்கம்.

top-10-news-5-pm
top-10-news-5-pm
author img

By

Published : Jul 20, 2020, 4:53 PM IST

எட்டு வழிச் சாலை வழக்கை ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம்!

டெல்லி: எட்டு வழிச் சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை உச்ச நீதிமன்றம் அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தது.

விகாஸ் துபே என்கவுன்ட்டர்: விசாரணைக் குழுவில் ஓய்வுபெற்ற நீதிபதியை நியமிக்க உத்தரவு

விகாஸ் துபே என்கவுன்ட்டர் தொடர்பான வழக்கில் விசாரணைக் குழுவில் ஓய்வுபெற்ற நீதிபதியை நியமிக்க வேண்டும் என உத்தரப் பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாதுகாப்பு, வெளியுறவு விவகாரங்கள் அரசியலாக்கப்படுகின்றன - பாஜக தேசிய தலைவர் நட்டா

டெல்லி: பாதுகாப்பு, வெளியுறவு விவகாரங்கள் அரசியலாக்கப்பட்டு இந்தியாவை பலவீனப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என பாஜக தேசிய தலைவர் நட்டா தெரிவித்துள்ளார்.

"மோடியின் போலியான பிம்பம் அவருக்கு பலம், ஆனால் நாட்டிற்கு..." - தாக்கும் ராகுல்

டெல்லி: தான் ஒரு இரும்பு மனிதர் என்ற மோடி உருவாக்கிய போலியான பிம்பம் அவருக்கு பலம் என்றாலும் நாட்டிற்கு அது மிகப் பெரிய பலவீனமாக அமைத்துவிட்டதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

பள்ளிகள் திறப்பு, மாணவர் சேர்க்கை எப்போது? - அமைச்சர் ஆலோசனை!

சென்னை: பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணிகளை துவக்குவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார்.

ஸ்டாலின் பெயரில் போலி ட்விட்டர் கணக்கு: நடவடிக்கை எடுக்கக் கோரி ஆணையரிடம் புகார்!

சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் பெயரில் ட்விட்டரில் போலி கணக்கை உருவாக்கி, தவறான தகவல் வெளியிட்ட நபர்கள் மீது துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஆர்.எஸ். பாரதி புகார் அளித்துள்ளார்.

கீழடி மியூசியத்தின் அனிமேஷன் வீடியோ வெளியீடு!

கீழடிக்கு அருகே கொந்தகை கிராமத்தில் 0.81 ஹெக்டேர் நிலப்பரப்பில் 12 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தொல்பொருள்களைக் காட்சிப்படுத்திட, அமைக்கப்படவுள்ள உலகத்தரம் வாய்ந்த அகழ்வைப்பகத்திற்கு (அருங்காட்சியகம்) முதலமைச்சர் பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.

'சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் மீண்டும் பெரியார் சிந்தனைகளைச் சேர்க்க வேண்டும்'

சென்னை: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் நீக்கப்பட்ட பெரியார் சிந்தனைகள், தமிழர்கள் வரலாறுகளைத் திரும்ப இணைக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கைத்தறி விற்பனைக்காக ப்ளிப்கார்ட்டுடன் கைகோர்த்த ஒடிசா அரசு!

புபனேஷ்வர்: நெசவாளர்கள், கைத்தறி தொழிலாளர்கள் ஆகியோரின் தயாரிப்புகளை நாடு முழுவதும் விற்பனை செய்வதற்காக ஒடிசா அரசு, இணைய வர்த்தக நிறுவனமான ப்ளிப்கார்ட்டுடன் கைகோர்த்துள்ளது.

ஒடிடி தளத்தில் வெளியாகும் 'லாக்கப்' திரைப்படம்!

நடிகர் வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள 'லாக்கப்' திரைப்படம் ஒடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.