ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3PM - top 10 news etv bharat tamil

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம்.

ஈடிவி பாரத் 3 மணி செய்தி
ஈடிவி பாரத் 3 மணி செய்தி
author img

By

Published : Jul 25, 2020, 3:01 PM IST

அரசுடைமையானது ஜெயலலிதாவின் வேதா நிலையம்!

சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்திற்கு இழப்பீடாக 68 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ததன் மூலம், அந்த இல்லம் அரசுடைமையாக்கப்பட்டதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

வீட்டு வாசலில் சிறுநீர் கழித்த ஏபிவிபி தேசிய தலைவர்: பிரச்னை இதுதானாம்

சென்னை: நங்கநல்லூர் அடுக்குமாடி குடியிருப்பில் கார் நிறுத்துவதில் ஏற்பட்ட பிரச்னையால் தனியாக வசிக்கும் பெண் ஒருவரின் வீட்டின் முன்பு ஏபிவிபி தேசிய தலைவர் சிறுநீர் கழித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் - ஸ்டாலின்

சென்னை: கரோனா காலத்தில் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேச முதலமைச்சருக்கு கரோனா உறுதி!

போபால்: மத்தியப் பிரதேச முதலமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆபர்ன் பல்கலைக்கழகத்தில் சீட்... ரூ.50 லட்சம் உதவித்தொகை: தெலங்கானா மாணவிக்கு கிட்டிய வாய்ப்பு!

ஹைதராபாத்: ஆபர்ன் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பாடப்பிரிவில் பயில தெலங்கானாவைச் சேர்ந்த சுஹார்ஷா பாஸ்கர்லா என்ற மாணவிக்கு சுமார் 50 லட்சம் ரூபாய் உதவித்தொகையாகக் கிடைத்துள்ளது.

சிறப்பு ரயில்களுக்காக ரூ.2,142 கோடி செலவழித்த இந்தியன் ரயில்வே!

டெல்லி: குடிபெயர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்புவதற்காக இந்தியன் ரயில்வே இரண்டாயிரத்து 142 கோடி ரூபாய் செலவழித்ததாகத் தெரிவித்துள்ளது.

தங்கக் கடத்தல் வழக்கு: ஸ்வப்னா லாக்கரிலிருந்து கட்டுக்கட்டாகப் பணம், ஒரு கிலோ தங்கம் பறிமுதல்!

திருவனந்தபுரம்: கேரள தங்கக் கடத்தலில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா லாக்கரிலிருந்து ஒரு கோடி ரூபாய் பணத்தையும் ஒரு கிலோ தங்கத்தையும் என்ஐஏ பறிமுதல் செய்துள்ளது.

யுவனின் ஹிட் பாடலை பாடிய ஹரிஷ் கல்யாண்!

யுவன் சங்கர் ராஜா பாடிய சாய்ந்து சாய்ந்து பாடலை நடிகர் ஹரீஷ் கல்யாண் கீபோர்ட் வாசித்துக்கொண்டே பாடி அசத்தியுள்ளார்.

ஆடுகளத்தின் ஈரப்பதத்தை பயன்படுத்தி இங்கிலாந்துக்கு நெருக்கடி அளிப்போம் - கிரேக் பரத்வெய்ட்

மான்செஸ்டர்: ஆடுகளத்தில் ஈரப்பதம் இருந்ததன் காரணமாக கேப்டன் ஹோல்டர் முதலில் பவுலிங் செய்யும் முடிவை தேர்ந்தெடுத்தார் என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க பேட்ஸமேன் கிரேக் பரத்வெய்ட் தெரிவித்துள்ளார்.

பெட்ரோலைவிட காஸ்ட்லியாக மாறும் டீசல்!

டெல்லி: எண்ணெய் நிறுவனங்கள் இன்று டீசல் விலையை லிட்டருக்கு 12 பைசா வரை உயர்த்தியுள்ளன. அதே சமயம் பெட்ரோலின் விலை கடந்த 26 நாள்களாக எவ்வித விலை உயர்வையும் சந்திக்கவில்லை.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.