1.அமெரிக்க அதிபராக ஜோ பைடன் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!
ஜோ பைடனை அதிபராக அங்கீகரிக்கக் கூடாது என்று ட்ரம்ப் ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தில் வன்முறையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், அமெரிக்க நாடாளுமன்றக் கூட்டத்தில் ஜோ பைடன் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதை உறுதி செய்து, சான்று வழங்கி, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
2. நான் ரெடி! மிஸ்டர் பழனிசாமி நீங்க ரெடியா? - சவாலை ஏற்ற ஸ்டாலின்!
சம்பந்திக்கு டெண்டர் கொடுத்த ஊழல் வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் விதித்த தடையை நீக்க நடவடிக்கை எடுத்து விட்டு, ஊழல் புகார்கள் குறித்து விவாதிக்க வாருங்கள் என்றும், விவாதிக்க தான் தயார் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் பழனிசாமியின் சவாலை ஏற்றுள்ளார்.
3.'அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக் குழுவில் மனுதாரர்'- நீதிமன்றம் உத்தரவு
அனைத்து சமூகத்தினருக்கும் வாய்ப்பளிக்கும் வகையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக் குழுவை அமைக்கக்கோரிய வழக்கில், மனுதாரரை விழாக் குழுவில் சேர்க்க உத்தரவிட்டு, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கு விசாரணையை முடித்துவைத்தது.
4.சென்னை 1% குறைந்த கரோனா சிகிச்சை பெறுவோர்
சென்னை: மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை ஒரு விழுக்காடாக குறைந்துள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
5.கரோனாவுக்கு அப்புறமும் நீண்ட ஆயுசு வேணுமா? - இனி இதைச் சாப்பிடுங்க!
கரோனா பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்த பின்னரும்கூட அவர்களுக்கு ஆரோக்கியம் சார்ந்த பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதைத்தான் போஸ்ட் கோவிட் சின்ட்ரோம் அதாவது நாள்பட்ட கோவிட் நோய் என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். ஆகையால் கரோனா குணமடைந்தால் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது. உடலின் பிற உறுப்புகளைப் பாதிக்காதவண்ணம் அவற்றை வலுப்படுத்த வேண்டும்.
6.பறவைக் காய்ச்சல் : பண்ணை விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கேரள அரசு முடிவு
பறவைக் காய்ச்சல் எதிரொலியாக நடைபெற்று வரும் பறவைகள் அழிப்பு பணியால் பாதிக்கப்படும் பண்ணை விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது.
7.தொடக்கநிலை நிறுவனங்களை ஊக்குவிக்கும் நேரம்
5ஜி காலகட்டத்தில் டிஜிட்டல் இந்தியாவுக்கு சுகாதாரம், கல்வி, விருந்தோம்பல் மற்றும் விவசாயத் துறைகளில் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்ற ஊகங்களின் பின்னணியில், அதிகமான ஆக்கப்பூர்வ கண்டுபிடிப்புகள் நாட்டில் உருவாக வேண்டும். இத்தகைய வளர்ச்சி சார்ந்த விரிவான பாடத்திட்டத்தை உருவாக்கும் நோக்கத்துடன், ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பயிற்சியும், தரமான கண்டுபிடிப்புகளுக்கு முறையான ஊக்கமும் வழங்கப்பட வேண்டும்.
8.ராஜஸ்தான் புறப்பட்டது வலிமை படக்குழு!
சென்னை, ஹைதராபாத்தில் படப்பிடிப்பை முடித்த வலிமை படக்குழுவினர் தற்போது அடுத்தக் கட்ட படப்பிடிப்பிற்காக ராஜஸ்தான் புறப்பட்டுச் சென்றனர்.
9.புதிய லோகோவை கின்னஸ் சாதனையுடன் வெளியிட்ட கியா!
கியா மோட்டார் நிறுவனம் தனது லோகோவை புதுப்பித்திருப்பதுடன், புதிய முழக்கமாக “மூவ்மெண்ட் தட் இன்ஸ்பையர்ஸ்” (Movement that inspires) என மாற்றி அமைத்துள்ளது.
10. IND vs AUS: லாபுசாக்னே, புகோவ்ஸ்கி அரைசதம்; வலிமையான நிலையில் ஆஸ்திரேலியா!
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்ஸில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 166 ரன்களை எடுத்துள்ளது.