எதிர்கட்சி தலைவர் மீது அவதூறு: காவல் ஆணையரிடம் புகார்!
சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கே பழனிசாமி மீது அவதூறு பரப்புவதாக காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வங்கியில் ரூ.10 லட்சம் கடன் பெற்று நிவாரணம் வழங்கும் வார்டு உறுப்பினர்!
திருவள்ளூர்: கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கில், வங்கியில் ரூ.10 லட்சம் கடன் பெற்று, நிவாரணப் பொருட்கள் வழங்கி வரும் ஊராட்சி வார்டு உறுப்பினரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முழு ஊரடங்கு: ஆட்சியர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை!
சென்னை: தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நாளை (மே.24) முதல் அமலாக உள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார்.
மணமகளின் தந்தைக்கு கரோனா - ரத்தான திருமணத்தால் சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்!
திருநெல்வேலி: மணமகளின் தந்தைக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதியானதையடுத்து, சுமார் 3 லட்சம் ரூபாய் செலவில் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் ரத்து செய்யப்பட்டது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மின்சார கம்பம் சாயுதா.... ஒரே இடத்தில் அடுத்தடுத்து நடக்கும் விபத்துகள்!
காஞ்சிபுரம்: வையாவூர் சாலையில் ஒரே இடத்தில், அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் அப்பகுதி வாகன ஓட்டிகள் அதிர்ச்சிக்குள்ளாகிவருகின்றனர்.
கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் விற்பனை: இருவர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!
ரெம்டெசிவிர் மருந்தைப் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்ற இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாஷ் புயலை எதிர்கொள்ளத் தயாராகும் ஒடிசா, மேற்கு வங்கம்!
வங்கக்கடலில் உருவாகும் யாஷ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஒடிசா, மேற்கு வங்கம் மாநிலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
இஸ்ரேல், பாலஸ்தீனம் போர் முடிவு: ஐ.நா. வரவேற்பு!
ஜெருசலேம்: இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடந்து வந்த போர் மே 21ஆம் தேதி முடிவுக்கு வந்துள்ளது. எகிப்தின் இந்த முயற்சியை ஐ.நா. சபை வரவேற்றுள்ளது.
இருபது ஆண்டுகளுக்குப் பிறகு பொங்கும் லாவா... 20 லட்சம் பேர் வெளியேற்றம்!
காங்கோ: சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு நைரா கொங்கோ எரிமலை ஏற்பட்ட வெடிப்பு காரணமாக, அதனைச் சுற்றியுள்ள 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மல்யுத்த வீரரைச் சுற்றிவளைத்தத் தனிப்படை... சுஷில் குமார் கைது!
டெல்லி: சக வீரரைக் கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த சுஷில் குமாரை, தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர்.