ETV Bharat / state

காலை 11 மணி செய்தி சுருக்கம் TOP 10 NEWS 11 AM

ஈடிவி பாரத்தின் காலை 11 மணி செய்தி சுருக்கம்

top-10-news-11-am
top-10-news-11-am
author img

By

Published : Aug 22, 2021, 11:02 AM IST

1.முதுகலை பட்டப்படிப்பு: நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பம்

முதுகலை பட்டப்படிப்பில் சேர நாளை முதல் செப்டம்பர் ஒன்றாம் தேதிவரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்குனர் பூர்ண சந்திரன் அறிவித்துள்ளார்

2.'வந்தாரை வாழவைக்கும் சென்னை'- முதலமைச்சர் வாழ்த்து

382 ஆவது சென்னை தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துப் பதிவு வெளியிட்டுள்ளார்.

3.முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

4.காபூலில் இருந்து இந்தியர்கள் மீட்பு

இந்திய விமானப் படையின் சி17 ரக விமானம் மேலும் 107 இந்தியர்கள் உள்பட 168 பேருடன் காபூலில் இருந்து புறப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

5.சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் நீடிப்பு

சென்னை மெட்ரோ ரயில் சேவை நாளை (ஆக.23) முதல் காலை 5:30 மணி முதல் இரவு 11 மணிவரை செயல்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

6.மதுரையில் 3500 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள்

மதுரை உசிலம்பட்டி அருகே சுமார் 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாறை ஓவியங்களை ஆய்வாளர் காந்திராஜன் தலைமையிலான குழு கண்டுபிடித்துள்ளது.

7.குழந்தை இல்லாத மருமகளிடம் அத்துமீறிய மாமனார்... உணவில் எலி பேஸ்ட் வைத்துக் கொன்ற மருமகள்

முதுகுளத்தூர் அருகே பாலியல் தொந்தரவு கொடுத்த மாமனாரை உணவில் எலி பேஸ்ட் வைத்துக் கொன்ற மருமகளை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

8.ரக்‌ஷா பந்தன்: நாட்டு மக்களுக்கு தலைவர்கள் வாழ்த்து

ரக்‌ஷா பந்தன் நன்னாளில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு உட்பட பல அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

9.புதுவை சட்டப்பேரவை துணை சபாநாயகர் பதவி: போட்டியின்றித் தேர்வாகும் என்.ஆர். காங்கிரஸ் ஆறுமுகம்?

சட்டப்பேரவை துணை சபாநாயகர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று (ஆக.21) தொடங்கிய நிலையில், என்.ஆர் காங்கிரஸ் ஆறுமுகம் போட்டியின்றித் தேர்வாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

10வாவ்... சின்ன தம்பி குஷ்பு ரிட்டன்ஸ்- குஷியில் ரசிகர்கள்

நடிகை குஷ்பு, உடல் எடையைக் குறைத்து வெளியிட்டுள்ள புதிய புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.