நடமாடும் காய்கறிகள் விற்பனை: விபரங்களை அறிய இணையதளம் அறிவிப்பு
சென்னை: மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் 3 சக்கர வாகனங்கள், தள்ளுவண்டிகள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்வோரின் எண்ணிக்கை, விபரங்களை அறிந்து கொள்ள, மாநகராட்சி சார்பில் இணையதளம் வெளியிடப்பட்டுள்ளது.
மனிதநேய சேவை: ஆதரவற்றோருக்கு மதிய உணவு வழங்கும் கிராமத்தினர்!
ராமநாதபுரம்:கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காலத்தில், உணவின்றி தவிக்கும் ஆதரவற்றவர்களுக்கு மதிய உணவு அளித்து வரும் முதுனால் கிராம மக்களின் சேவை பாராட்டை பெற்றுள்ளது.
HBD மனோரமா - ஆச்சி பிறந்த தினம் இன்று!
மனோரமா ஆச்சி இன்று நம்முடன் இல்லை. மண்ணை விட்டு அவர் பிரிந்தாலும்,ஜில் ஜில் ரமாமணியாக, கண்ணம்மாவாக, தாயம்மாவாக, தாய் கிழவியாக, தனியாக குழந்தையை வளர்த்து ஆளாக்கும் ஆளுமை மிக்க அம்மாவாக என்றும் நம் மனங்களில் அவர் வாழ்ந்து கொண்டே இருப்பார்...
ஆக்சிஜன் படுக்கை வசதிகள் உள்ளதா? - ஆட்சியர் ஆய்வு!
ராமநாதபுரம்: ஆக்சிஜன் படுக்கை வசதிகள் குறித்து, ராமநாதபுரம், கீழக்கரை அரசு மருத்துவமனைகளில் மாவட்ட ஆட்சியர், எம் எல். ஏ ஆகியோர் ஆய்வு செய்தனர்.
நடமாடும் காய்கறி விற்பனை: எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார்
மயிலாடுதுறை: செம்பனார்கோவில் ஒன்றியத்தில் வேளாண்மை, தோட்டக்கலைத்துறை சார்பில் நடமாடும் காய்கறி விற்பனை வாகனத்தை பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினர் நிவேதா முருகன் தொடங்கி வைத்தார்.
கடம்பூரில் கர்நாடகா மதுபான பாட்டில் விற்பனை - இருவர் கைது!
ஈரோடு: கர்நாடகாவிலிருந்து மதுபான பாட்டில்களை வாங்கி, சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்த இரண்டு இளைஞர்களைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
பி.பி.இ. கிட் குறித்து புகார்: செவிலியர்களுக்கு மெமோ!
புதுச்சேரி: தரமான பி.பி.இ கிட் வழங்கக்கோரி சமூக வலைதளங்களில் பதிவிட்ட செவிலியருக்கு மெமோ வழங்கப்பட்டுள்ளது.
சடலங்களை ஒப்படைக்கப் பணம் பெற்ற பெருநகராட்சி ஊழியர் சஸ்பெண்ட்!
காஞ்சிபுரம்: கரோனாவால் இறந்தவர்களின் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப் பணம் பெற்ற பெருநகராட்சி ஊழியரை, பெருநகராட்சி ஆணையர் பணியிடை நீக்கம் செய்தார்.
இலங்கை சரக்கு கப்பலில் தீ விபத்து: களத்தில் இந்தியக் கடலோரக் காவல்படை!
இலங்கையில் ‘எக்ஸ்பிரஸ் பியர்ல்’ சரக்கு கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் இந்தியக் கடலோரக் காவல் படையின் மூன்று கப்பல்கள் களமிறக்கப்பட்டுள்ளன.
நடுக்காட்டில் பெண் குழந்தையைப் பெற்றெடுத்த கர்ப்பிணி!
சரியான சாலை வசதிகள் இல்லாத சபரிமலை மலைப்பகுதியில் வைத்து பெண் ஒருவருக்குப் பிரசவம் பார்க்கப்பட்டது. அதில் அவருக்கு பெண் குழந்தை பிறந்ததுள்ளது.