ETV Bharat / state

11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 11 AM - செய்தி சுருக்கம் ஈடிவி பாரத்

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச் சுருக்கம்.

ETV BHARAT 11 AM NEWS
ETV BHARAT 11 AM NEWS
author img

By

Published : Aug 28, 2020, 10:56 AM IST

தொழில்ரீதியாக வந்தால் தனிமைப்படுத்தல் தேவையில்லை - தமிழ்நாடு அரசு

சென்னை: பிற மாநிலங்களிலிருந்து வணிகரீதியாகத் தமிழ்நாடு வருவோர் 72 மணி நேரத்தில் திரும்பச் சென்றால் தனிமைப்படுத்தல் தேவையில்லை எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க விவகாரம்: அமைச்சர் பாண்டியராஜ் உள்ளிட்ட மூவரிடம் விசாரணை!

சென்னை: 11எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்செய்யப்பட்ட வழக்கில், அமைச்சர் பாண்டியராஜன், சட்டப்பேரவை உறுப்பினர் நடராஜன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பார்த்திபன் ஆகியோரிடம் பேரவைத் தலைவர் தனபால் காணொலி காட்சி வாயிலாக விசாரணை நடத்தினார்.

அடுத்த மாதம் முதல் நடமாடும் ரேஷன் கடைகள் - அமைச்சர் செல்லூர் ராஜு

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த மாதம் முதல் நடமாடும் ரேஷன் கடைகள் தொடங்கப்படும் எனக் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.

மாணவர்களுக்கு ஐஏஎஸ் தேர்வின் பெண் சாதனையாளர் உரை!

கரூர்: குடிமைப்பணி போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டுதல் கலந்துரையாடலில், ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெற்ற சாதனையாளர் மாணவர்களுக்கு இணையம் மூலம் உரையாற்றினார்.

அரசு பேருந்து ஓட்டுநர் தற்கொலை! போலீஸ் விசாரணை

விழுப்புரம்: அரசு பேருந்து ஓட்டுநர் ஒருவர் பணிமனையின் பின்புறம் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

’அரியர் பாஸ் பண்ண வைத்ததற்கு நன்றி அய்யா...!’ - வைரலாகும் காணொலி

நாகப்பட்டினம்: அரியர் பாஸ் பண்ண வைத்ததற்கு நன்றி ஐயா என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைப் பார்த்து கத்திய நாகை இளைஞரின் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

சுவர் இடிந்த விபத்து: இறந்தவரின் குடும்பத்திற்கு செல்வகணபதி நிதியுதவி!

சேலம்: பழைய சுவர் இடிந்து விழுந்ததில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து திமுக சேலம் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் செல்வகணபதி ஆறுதல் கூறினார். மேலும் இறந்தவரின் குடும்பத்திற்கு நிதியுதவியும் வழங்கினார்.

கோவிட் - 19: மெக்சிகோவை நெருங்கும் இந்தியா!

டெல்லி: உலகளவில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கையின் பட்டியலில் மெக்சிகோ மூன்றாவது இடத்தை பிடித்துள்ள நிலையில், இந்தியா நான்காவது இடத்தை பிடித்துள்ளது.

மூதாட்டிக்கு மருத்துவம் அளிக்கச் சென்ற வீட்டில் செவிலி தூக்கிட்டுத் தற்கொலை!

சென்னை: மூதாட்டிக்கு மருத்துவம் அளிக்கச் சென்ற வீட்டில் செவிலி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல நடிகையிடம் இருந்து போதைப்பொருள்கள் பறிமுதல்

பெங்களூரு: கன்னட நடிகை அனிகாவிடம் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள்களை போதைப் பொருள்கள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.