'இப்போது செலவு செய்யத் தயங்கினால் விளைவுகள் மோசமானதாக மாறும்!'
ஜெனீவா : கோவிட்-19 தடுப்பூசியை உருவாக்குவதற்கு இப்போது செலவு செய்யாது போனால், பிற்காலத்தில் பெரும் வீழ்ச்சியை எதிர்த்துப் போராட வேண்டிய சூழல் ஏற்படும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
மாவட்ட எல்லைகள் வரை பேருந்து இயக்கம்: சிரமப்படும் பொதுமக்கள்!
நாமக்கல்: மாவட்டங்களின் எல்லைகள் வரை மட்டுமே, பேருந்து இயக்கப்படுவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
'கட்டுப்பாடுகளை கடுமையாக்கக்கோரி முதலமைச்சரிடம் கோரிக்கை' - அமைச்சர் கே.சி. வீரமணி!
வேலூர்: கட்டுப்பாடுகளை கடுமையாக்கக்கூறி, இம்மாவட்ட அமைச்சர் என்ற முறையில் முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் என வணிகவரித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி தெரிவித்தார்.
ஊரடங்கால் பாகிஸ்தானில் சிக்கிய இந்தியர்கள் தாயகம் திரும்பினர்
ஊரடங்கு காரணமாக பாகிஸ்தானில் சிக்கிய இந்தியர்கள் 208 பேர், அமிர்தசரஸில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லையான அத்தாரி, வாகா பகுதிகள் வழியாக தாயகம் திரும்பினர்.
விஜய் சேதுபதியின் மாஸான போட்டோசூட்!
விஜய் சேதுபதியின் மாஸான போட்டோசூட் வைரலாகும் புகைப்படம்!
மகனின் மருத்துவப் படிப்பிற்காக கடன் வாங்கிய தொழிலாளி: திருப்பி கட்டமுடியாததால் தற்கொலை முயற்சி
நாமக்கல்: மகனின் மருத்துவப் படிப்பிற்காக கடன் வாங்கிய கூலித்தொழிலாளி ஒருவர், திருப்பிக் கட்ட முடியாததால் விஷம் அருந்தி, தற்கொலைக்கு முயன்று, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொள்ளாச்சி அருகே குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 586 கிலோ பான் மசாலா பறிமுதல்!
கோவை : பொள்ளாச்சி அருகே சூளேஸ்வரன்பட்டி குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட 586 கிலோ பான் மசாலா பாக்கெட்டுகளை உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
பதஞ்சலி கோவிட்-19 மருந்து சர்ச்சை - ராம்தேவ் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு!
ஜெய்ப்பூர்: பதஞ்சலி ஆயுர்வேத் தலைமை நிர்வாக அலுவலர் ஆசாரியா பால்கிருஷ்ணா, யோகா குரு ராம்தேவ் உட்பட ஐந்து பேர் மீது ஜோதி நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கரோனாவுக்கு மருந்து கண்டுப்பிடித்ததாக பொய்யான தகவலை பரப்பி வருவதாக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
'குணமடைந்தோர் பிளாஸ்மா தெரபிக்கு முன்வர வேண்டும்' - அமைச்சர் விஜய பாஸ்கர்
மதுரை: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தன்னார்வத்துடன் பிளாஸ்மா தெரபி சிகிச்சைக்கு முன்வர வேண்டும் என அமைச்சர் விஜய பாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோடையில் உற்சாகமளிக்கும் சவுன்ஃப் கா சர்பத்!
சவுன்ஃப் எனப்படும் பெருஞ்சீரகம் மற்ற உணவுகளைக் காட்டிலும் நமது உடலைக் குளிர்ச்சியாக வைக்கிறது. இது நமது உடலுக்குப் புத்துணர்ச்சியைத் தருகிறது. இதுதவிர நமது செரிமானத்திற்கும் உதவுகிறது. இது இந்திய சமையலறையில் மிக முக்கிய அங்கம் வகிக்கிறது. இதன்மூலம் தயாரிக்கப்படும் சர்பத்தை ஆரம்பத்தில் பருக ஆரம்பிக்கும்போது சுவையானதாகத் தெரியாது. ஆனால், கோடைக்காலத்தில் நமது உடலின் வெப்பத்தைத் தணிக்க இது சரியான பானமாகும். சவுன்ஃப் கா சர்பத்துடன் வீட்டிலேயே இருங்கள்! பாதுகாப்பாக இருங்கள்!