சென்னை தண்டையார்பேட்டையில் இளைய முதலி தெருவில் சாலையோரம் உள்ள மின்மாற்றியில் (Transformer) திடீரென மின் கசிவு ஏற்பட்டுள்ளது. இதில் ஏற்பட்ட தீப்பொறி பட்டு அருகிலிருந்த குப்பைகள் எறியவே அருகில் உள்ள மின்மாற்றியில் தீ மளமளவென பரவி கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.
இதையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக தண்டையார்பேட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் ரசாயன கழிவுகளை கொண்டு உடனடியாக தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு அருகில் இருந்த கடைகள் காப்பாற்றப்பட்டன.
இதையும் படிங்க: முனியப்பன் சாமி சிலைக்கு தீ - காவல் துறையினர் விசாரணை!