காந்தி ஜெயந்தி முன்னிட்டு நாளை (அக்.2) சென்னையில் டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், "காந்தி ஜெயந்தி நாளை அனுசரிக்கப்படுகிறது. இதன் காரணமாக சென்னையில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள் மூட வேண்டும்.
மேலும் தடையை மீறி மது விற்றால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: புதுவையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவு: மதுபானம் உள்ளிட்டவற்றில் கிடைக்கும் வரி வருவாய் சரிவு!