ETV Bharat / state

கேபிள் ஆபரேட்டர்கள் கூடுதல் தொகை வசூலித்தால் புகார் தெரிவிக்க கட்டணமில்லா எண் - தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம்

சென்னை: கேபிள் ஆபரேட்டர்கள் கூடுதல் தொகை வசூல் செய்தால் புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அறிமுகம் செய்துள்ளார்.

கேபிள் டிவி நிறுவனம்
கேபிள் டிவி நிறுவனம்
author img

By

Published : Jul 22, 2020, 6:44 AM IST

தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் சார்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது, "தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் சிறந்த கேபிள் டிவி சேவையை குறைந்த கட்டணத்தில் பொது மக்களுக்கு வழங்கி வருகிறது. இதுவரை 16 ஆயிரத்து 712 உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் வாயிலாக 35 லட்சத்து 64 ஆயிரத்து 589 விலையில்லா SD செட்டாப் பாக்ஸ்களையும், 3 ஆயிரத்து 728 உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் வாயிலாக ரூ.500 என்ற குறைந்த விலையில் 38 ஆயிரத்து 200 HD செட்டாப் பாக்ஸ்களையும் வழங்கியுள்ளது.

தற்பொழுது தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தால் ரூ.140+18 விழுக்காடு வரி என்ற மாதக்கட்டணத்தில் 61 கட்டணச் சேனல்களும், 137 கட்டணமில்லா சேனல்களும் சந்தாதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. சந்தாதாரர்கள் மாத கட்டணமாக ரூ.140+18 விழுக்காடு வரி மட்டும் செலுத்தினால் போதும். கூடுதல் கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை. கூடுதல் தொகை வசூல் செய்வதாக புகார் தெரிவிக்க வேண்டுமென்றால் இந்நிறுவனத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800-425-2911-க்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி சேவை வழங்கும் உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் இந்நிறுவனத்திடமிருந்து இலவசமாக பெறும் SD செட்டாப் பாக்ஸ்களை சந்தாதாரர்களுக்கு தொகை ஏதும் பெற்றுக் கொள்ளாமல் இலவசமாக வழங்க வேண்டும். மேலும், சந்தாதாரர்களிடமிருந்து அரசு நிர்ணயம் செய்த சந்தா தொகைக்கு மேல் அதிக தொகை வசூல் செய்யக் கூடாது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

அதிக தொகை வசூலிப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.