சென்னை: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் ஆயுதப்படையில் பணிபுரிந்து வரும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த நாகநாதன் பாண்டி பங்குபெறுகிறார்.
கடந்த 41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் போட்டியில் காவலர் ஒருவர் தேர்வாகி இருப்பதால், அவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு, நாகநாதன் பாண்டியின் குடும்பத்தினரை வரவழைத்து பாராட்டுகளையும், சிறப்பு உதவிகளையும் வழங்கினார்.
இந்நிலையில் ஓட்டப்பந்தய போட்டியில் பங்கேற்றுள்ள நாகநாத பாண்டியின் ஆட்டம் நாளை (ஆக.6) மாலை நடைபெற இருப்பதால் சென்னை காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் நாகநாதன் பாண்டி வெற்றி பெற்று நாடு திரும்ப வாழ்த்துகளை தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி சென்னையில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் நாகநாதனை பாராட்டி வாழ்த்து பலகை வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாடு சட்டப்பேரவையில் காகிதமில்லா பட்ஜெட்!