சென்னை: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு 14 வகையான மளிகை பொருள்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஜூன் 3ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்திற்கான டோக்கன்கள் இன்று முதல் விநியோகம் செய்யப்படுகிறது. கரோனா பரவல் காரணமாக ரேஷன் கடை ஊழியர்களே வீடு வீடாகச் சென்று விநியோகம் செய்கின்றனர். ரேஷன் அட்டைதாரர்களுக்கு 14 மளிகை பொருள்கள் வழங்கும் திட்டத்தில்,
- சர்க்கரை- 500 கிராம்
- கோதுமை – 1 கிலோ
- உப்பு- 1 கிலோ
- ரவை- 1 கிலோ
- உளுத்தம் பருப்பு- 500 கிராம்
- புளி- 250 கிராம்
- கடலை பருப்பு- 250 கிராம்
- டீ தூள் -200கிராம்
- கடுகு- 100 கிராம்
- சீரகம்- 100 கிராம்
- மஞ்சள் தூள்- 100 கிராம்
- மிளகாய் தூள்- 100 கிராம்
- குளியல் சோப்பு 25 கிராம் – 1
- துணி துவைக்கும் சோப்பு (250 கிராம்)- 1
ஆகிய பொருள்கள் அடங்கும். மேலும் கரோனா நிவாரணத் தொகையின் இரண்டாவது தவணையான 2000 ரூபாய் வழங்குவதற்கான டோக்கன்களும் இன்று முதல் விநியோகம் செய்யப்படுகிறது.
பெறப்பட்ட டோக்கன் அடிப்படையில் ஜூன் 15 முதல் மக்கள் இவற்றை ரேஷன் கடைகளில் பெற்று கொள்ளலாம். அப்போது அரசின் கரோனா விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.