மகாராஷ்டிராவில் இருந்து திருநெல்வேலிக்கு 25ஆம் தேதி சிறப்பு ரயில் மூலம் வந்தவர்களில் 111 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள தொற்று நோய் மருத்துவமனை உள்பட தமிழ்நாட்டில் 71 ஆய்வகங்களுக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்த ஆய்வாளர்கள் மூலம் 11,334 நபர்களுக்கு சளி பரிசோதனை செய்யப்பட்டதில் 874 நபர்களுக்கு நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இவர்களில் 733 பேர் தமிழ்நாட்டில் இருந்தவர்கள். வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு திரும்பிய 141 நபர்களுக்கும் நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து திரும்பிய நபர்களில் மகாராஷ்டிரத்தில் இருந்து தமிழ்நாடு வந்த 135 பேருக்கும், மேற்கு வங்கம், தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து வந்த தலா ஒருவரும், கேரளாவிலிருந்து வந்த மூன்று பேருக்கும் கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
பேருந்து வழியாக தமிழ்நாடு வந்தவர்களில் மஹாராஷ்டிராவிலிருந்து 129 பேருக்கும், மேற்கு வங்கத்திலிருந்து ஒருவருக்கும், தெலங்கானாவிலிருந்து ஒருவருக்கும், கேரளாவிலிருந்து மூவருக்கும், கர்நாடகத்திலிருந்து ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மஹாராஷ்டிராவிலிருந்து சிறப்பு ரயில் மூலம் வந்தவர்களில் 6 பேருக்கு தொற்று உறுதியாகியது.
மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் 12, 737 ஆண்களுக்கும், 7,504 பெண்களுக்கும், 5 மூன்றாம் பாலினத்தோருக்கும் தொற்று உறுதியானது.
தமிழ்நாட்டில் இதுவரை 4 லட்சத்து 66 ஆயிரத்து 550 நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 20 ஆயிரத்து 246 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் தற்போது மருத்துவமனையில் 8,776 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 6,269 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 765 பேர் இன்று பூரண குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 11,311 பேர் இதுவரை சிகிச்சை மூலம் நலம் பெற்று வீட்டிற்கு சென்றுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நபர்களில் சிகிச்சை பலனின்றி 9 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து இறந்தவர்களின் எண்ணிக்கை 154ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் தொற்று பரவலின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை பொதுமக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று வெளிவந்துள்ள தகவலில் 6,118 பேர் உள்பட 13 ஆயிரத்து 362 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மருத்துவமனையில் 6,353 நோயாளிகள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 6,895 பேர் பூரண குணமடைந்து வீட்டிற்குச் சென்றுள்ளனர். 113 பேர் இறந்துள்ளனர். சென்னைக்கு அருகில் உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,000 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மாவட்டம் வாரியாக பாதிப்பு:
- சென்னை -13,362
- செங்கல்பட்டு -1,000
- திருவள்ளூர் -877
- கடலூர் -448
- காஞ்சிபுரம் -366
- அரியலூர் -365
- திருவண்ணாமலை -353
- திருநெல்வேலி -345
- விழுப்புரம் -343
- மதுரை -249
- கள்ளக்குறிச்சி -242
- தூத்துக்குடி -199
- கோயம்புத்தூர் -146
- பெரம்பலூர் -139
- திண்டுக்கல் -138
- விருதுநகர் -120
- திருப்பூர் -112
- தேனி -108
- சேலம் -107
- ராணிப்பேட்டை -97
- தஞ்சாவூர் -86
- தென்காசி -83
- கரூர் -80
- திருச்சிராப்பள்ளி -80
- நாமக்கல் -76
- ஈரோடு -72
- ராமநாதபுரம் -65
- கன்னியாகுமரி -60
- நாகப்பட்டினம் -54
- திருவாரூர் -42
- வேலூர் -42
- திருப்பத்தூர் -32
- சிவகங்கை -31
- கிருஷ்ணகிரி -26
- புதுக்கோட்டை -22
- நீலகிரி -13
- தருமபுரி -8
மேலும் வெளிநாடுகளிலிருந்து விமானம் மூலம் தமிழ்நாடு திரும்பிய 45 பேருக்கும், வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு திரும்பிய 155 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இருந்து திருநெல்வேலிக்கு 25ஆம் தேதி வந்த 930 பேருக்கு பரிசோதனை செய்ததில் 111 பேருக்கு நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.