நாளை (மே.28), மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 29, 30 ஆகிய தேதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மே 31ஆம் தேதி, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், கன்னியாகுமரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும்.
அடுத்த இரண்டு நாள்களுக்கு கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் அதிகபட்சமாக வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 40, குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழையளவு (சென்டிமீட்டரில்):
மைலாடி (கன்னியாகுமரி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி)- தலா 9
சுருளகோடு (கன்னியாகுமரி), கன்னிமார் (கன்னியாகுமரி), புத்தன் அணை (கன்னியாகுமரி), களியல் (கன்னியாகுமரி), பெருஞ்சாணி (கன்னியாகுமரி) - தலா 6
நாகர்கோயில் (கன்னியாகுமரி), சித்தார் (கன்னியாகுமரி), கொட்டாரம் (கன்னியாகுமரி) - தலா5
பாபநாசம் (திருநெல்வேலி), பெரியார் (தேனீ), சின்னக்கல்லார் (கோவை), தென்காசி, கன்னியாகுமரி- தலா 4
பூதப்பாண்டி (கன்னியாகுமரி), தக்கலை (கன்னியாகுமரி), தேக்கடி (தேனீ), திருப்பதிசாரம் (கன்னியாகுமரி), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி) - தலா 3
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
மே 27, 28 ஆகிய தேதிகளில் குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்திலும், அவ்வப்போது 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
கேரளா, இலட்சத்தீவு, மாலத்தீவு, கிழக்கு இலங்கை கடல் பகுதிகளில் பலத்த காற்று 40-50 கிலோமீட்டர் வேகத்திலும், அவ்வப்போது 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
கடல் உயர் அலை முன்னறிவிப்பு:
தென் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் (குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை) நாளை இரவு 11.30 வரை கடல் அலை 3. 5 முதல் 4.0 மீட்டர் உயரம் வரை எழும்பக்கூடும். மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமெனவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதையும் படிங்க:6 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை - சென்னை வானிலை ஆய்வு மையம்