ETV Bharat / state

மாணவர்கள் கவனத்திற்கு: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் - neet exam updates

சென்னை: நீட் தேர்வுக்கு இன்று இரவு 11.50 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

NEET
NEET
author img

By

Published : Jan 6, 2020, 1:40 PM IST

இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இளங்கலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு தேசிய அளவில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. அடுத்த கல்வியாண்டில் மருத்துவம் சேர விருப்பம் மாணவர்கள் டிசம்பர் 2ஆம் தேதிமுதல் டிசம்பர் 31ஆம் தேதி இரவு 11.50 மணிவரை இணையதளம் மூலம் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இறுதி நாளான டிசம்பர் 31ஆம் தேதி அதிகளவில் விண்ணப்பித்தனர். ஆனால், பலர் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இது குறித்து எழுந்த புகாரை அடுத்து, தேசிய தேர்வு முகமை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதியை ஜனவரி 6ஆம் தேதி (இன்று) இரவு 11.50 வரை நீட்டித்து அறிவித்தது. மேலும், ஜனவரி 7ஆம் தேதிவரை அதற்கான கட்டணம் செலுத்தலாம் எனவும் கூறியுள்ளது.

ஆகையால், நீட் தேர்வு தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் இன்று இரவு 11.50 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுதவிர, இணைய வழியில் விண்ணப்பம் செய்தவர்கள் ஜனவரி 15ஆம் தேதிமுதல் 31ஆம் தேதிவரை அவற்றில் திருத்தம் செய்துகொள்ளலாம்.

நீட் தேர்விற்கான தேர்வுக்கூடம் நுழைவுச்சீட்டு மார்ச் மாதம் 27ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து, மே மாதம் 3ஆம் தேதி நீட் தேர்வு மதியம் 2 மணிமுதல் மாலை 5 மணிவரை (3 மணி நேரம்) 720 மதிப்பெண்களுக்கு நடைபெற உள்ளது. தேர்வு முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு அதிகளவில் மாணவர்கள் விண்ணப்பம் செய்திருக்கலாம் எனத் தெரிகிறது.

இதையும் படிங்க : சி.ஏ.ஏ. விவகாரம்: ராகுல், பிரியங்கா மீது அமித் ஷா பாய்ச்சல்!

Intro:நீட் தேர்வு இன்று இரவு 11.50 மணி வரை விண்ணப்பிக்கலாம் Body:நீட் தேர்வு இன்று இரவு 11.50 மணி வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை,
நீட் தேர்விற்கு இன்று இரவு 11.50 மணி வரை ( ஜனவரி 6 ந் தேதி ) விண்ணப்பிக்க முடியும்.

இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இளங்கலை மருத்துவப் படிப்புகளில் படிப்பதற்கு தேசிய அளவில் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தப் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பங்கள் டிசம்பர்2 ந் தேதி முதல் டிசம்பர் 31 ந் தேதி இரவு 11.50 மணி வரையில்  ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இறுதி நாளான டிசம்பர் 31 ந் தேதி அதிகளவில் விண்ணப்பித்தனர். ஆனால் பலர் விண்ணப்பம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து தேசிய தேர்வு முகமை நீட் தேர்விற்கு விண்ணப்பிக்கும் தேதியை ஜனவரி 6 இரவு 11.50 மணி வரை நீடித்துள்ளது. மேலும் 7 ந் தேதி வரை கட்டணம் செலுத்தலாம் என கூறியுள்ளது.எனவே நீட் தேர்வினை எழுதுவதற்கு இன்று இரவு மட்டும் வரையில் விண்ணப்பிக்க முடியும். கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு அதிகளவில் மாணவர்கள் விண்ணப்பம் செய்திருக்கலாம் என தெரிகிறது.

 மேலும் இணைய வழியில் விண்ணப்பம் செய்தவர்கள் அவற்றில் திருத்தம் செய்வதற்கு ஜனவரி 15 ந் தேதி முதல் 31 ந் தேதி வரையில் மீண்டும் வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளன. நீட் தேர்விற்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு மார்ச் மாதம் 27 ந் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. மே மாதம் 3 ந் தேதி நீட் தேர்வு மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை 3 மணி நேரம் 720 மதிப்பெண்களுக்கு நடைபெற உள்ளது.  இவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் 4 ம் தேதி வெளியிடப்படுகிறது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.