ETV Bharat / state

தங்கம் விலை தொடர் சரிவு! இன்னைக்கு எவ்வளவு குறைஞ்சது தெரியுமா? - இன்று தங்கத்தின் விலை

Today Gold Price: சென்னையில் இன்று (செப். 27) ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து, ரூ.43 ஆயிரத்து 840க்கு விற்பனையாகி வருகிறது.

Today Gold Price
அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 27, 2023, 12:27 PM IST

சென்னை: சேமிப்பு என்பது இந்திய மக்களிடையே தலைமுறை தலைமுறையாக தொடரும் ஒரு செயல் ஆகும். சேமிப்பை மக்கள் தங்கம், நிலம் உள்ளிட்ட அசையும், அசையா சொத்துக்களில் தான் வைக்கின்றனர். மேலும் சேமிப்பு மனிதனின் அத்தியாவதியமாகவும் கருதப்படுகிறது. ஆகையால் சேமிப்பை எதில் சேமிக்கலாம் என எண்ணம் தோன்றும் போது, முதலில் நினைவுக்கு வருவது தங்கம்.

பாமர மக்கள் முதல் செல்வாக்கு மிக்கவர்கள் வரை தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். அதில் பலரும் அதிகமாகவே முதலீடு செய்து மாட்டியும் கொள்கின்றனர். ஒரு தனி மனிதன் போதும் என்று சொல்லக்கூடியது உணவு, ஆனால் எவ்வளவு கொடுத்தாலும் வேணும் என்று சொல்லுக் கூடியது நகை போன்ற பொருட்செல்வம் எனலாம். அப்படிப்பட்ட பொருட்செல்வததை சிலர் தங்களது அத்தியாவசிய தேவைக்காகவும் வாங்குகின்றனர். சிலர் ஆடம்பரத் தேவைக்காகவும் வாங்குகின்றனர்.

அப்படிப்பட்ட தங்கத்தின் விலையானது சர்வதேச பொருளாதர சுழலில் மத்தியில், கமாடிட்டி மார்க்கெட்டைப் பொருத்து நீர்ணயம் செய்யபட்டு வருகிறது. அதனால் தான் தினமும் தங்கத்தின் விலையில் தினம் தினம் ஏற்றம் இறக்கம் காணப்பட்டு வருகிறது.

44 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த தங்கம்: கரோனாவிற்கு பிறகு பல நாட்களாக 44 ஆயிரத்தை கடந்து விற்பனையான தங்கம் மே, ஜூன் மாதங்களில் 44 ஆயிரத்திற்கு கீழ் குறைந்து காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தங்கத்தின் விலையானது மளமளவென அதிகரித்து 44 ஆயிரத்தைத் தாண்டியது.

இந்த நிலையில் சென்ற வாரம் உயர்ந்து வந்த தங்கத்தின் விலையானது இந்த வார சந்தை துவக்கத்தில் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நகைப்பிரியர்களின் எதிர்பார்ப்பை உடைக்கும் விதமாக வெறும் 1 ரூபாய் குறைந்து, பெரும் ஏமாற்றத்தைத் தந்தது எனலாம். ஆனால் அடுத்த நாளே தங்கத்தின் விலையானது சட்டென்று சவரனுக்கு ரூ.120 குறைந்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

அதனைத் தொடர்ந்து இன்றும் (செப். 27) தங்கத்தின் விலை குறைந்து காணப்படுகிறது. ஒருவேளை மாத இறுதியில் சட்ரென்று குறைந்து, மாத துவக்கத்தில் அதிகரிக்க வாய்ப்பு இருக்குமோ என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால் உடனடியாக தங்கம் வாங்க கிளம்புங்கள் மக்களே என நகை முதலீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தங்கம் விலை: சென்னையில் 22கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து 5,480-க்கும், சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.43 ஆயிரத்து 840-க்கும் விற்பனை ஆகி வருகின்றன. அதே போல் ஒரு கிராம் வெள்ளி 60 காசுகள் குறைந்து ரூ.77-க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.600 குறைந்து ரூ.77 ஆயிரத்திற்கும், விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய விலை நிலவரம்: (செப்டம்பர் 27);

  • 1 கிராம் தங்கம் (22கேரட்) - ரூ.5,480
  • 1 சவரன் தங்கம் (22கேரட்) - ரூ.43,840
  • 1 கிராம் வெள்ளி - ரூ.77
  • 1 கிலோ வெள்ளி - ரூ.77,000

இதையும் படிங்க: வந்தே பாரத்தால் வைகைக்கு வந்த சோதனை! பயண நேரத்தை குறைக்கக் கூறிய பயணிகளுக்கு தென்னக ரயில்வே கொடுத்த சர்ப்ரைஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.