சென்னை: சேமிப்பு என்றாலே மக்கள் மனதில் முதலில் தோன்று எண்ணம் தங்கம் போன்ற நகைகள் தான். முக்கியமாக நடுத்தர, பாமர மக்களுக்கு அத்தியாவசிய, எதிர்காலத் தேவைக்கு கைகொடுக்கும் ஒரு முக்கிய உதவு கோலாக தங்கம் விளங்கி வருகிறது. கையில் ஒரு 10 ஆயிரம் இருந்தால் கூட ஒரு 1 கிராம் வாங்கி விடலாமா? இது நம் குழந்தையின் எதிர்காலத்துக்கு தேவைப்படும், வீடு கட்ட தேவைப்படும் போன்ற பல எண்ணங்கள் தோன்றும்.
அப்படிப்பட்ட தங்கத்தின் விலையானது சர்வதேச பொருளாதர சுழலில் மத்தியில், கமாடிட்டி மார்க்கெட்டைப் பொருத்து நீர்ணயம் செய்யபட்டு வருகிறது. ஆகையால் தான் தினமும் தங்கத்தின் விலையில் தினம் தினம் ஏற்றம் இறக்கம் காணப்பட்டு வருகிறது. மேலும் கடந்த 4 நாட்களுக்கு மேலாக அதிகரித்து வந்த தங்கத்தின் விலை தற்போது திடீரென குறைந்துள்ளது. ஆகையால் உடனடியாக தங்கம் வாங்க செல்லுங்கல் மக்களே என தங்க முதலீட்டாளர்கள் கூறுகின்றனர்.
தங்கம் வாங்க வேண்டும் என்றால் முதலில் அதன் விலையைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம் தானே, ஆகையால் முதலில் தங்கத்தின் இன்றைய விலை என்ன என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
தற்போது சென்னையில் இன்று (செப்.21) ஒரு சவரன் ரூ.44 ஆயிரத்து 240க்கு விற்பனையாகிறது. அதாவது 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5 ஆயிரத்து 530க்கும், சவரனுக்கு ரூ.160 என குறைந்து ரூ.44 ஆயிரத்து 240க்கும் விற்பனையாகி வருகிறது. அதேபோல, 24 கேரட் சுத்த தங்கம் கிராமுக்கு ரூ.6 ஆயிரமாகவும் விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிராமுக்கு 300 காசுகள் குறைந்து ரூ.78க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.78 ஆயிரத்திற்கும் விற்பனை ஆகி வருகிறது.
இன்றைய விலை நிலவரம்: (செப்டம்பர் 21)
- 1 கிராம் தங்கம் (22கேரட்) - ரூ.5,530
- 1 சவரன் தங்கம் (22கேரட்) - ரூ.44,240
- 1 கிராம் தங்கம் (24-கேரட்) - ரூ.6,000
- 8 கிராம் தங்கம் (24-கேரட்) - ரூ 48,000
- 1 கிராம் வெள்ளி - ரூ.78
- 1 கிலோ வெள்ளி - ரூ.78,000