சென்னை: தங்கத்தின் விலையானது சர்வதேச பொருளாதர சூழலில், கமாடிட்டி மார்க்கெட்டைப் பொறுத்தே நிர்ணயம் செய்யப்படுகிறது. இது மட்டுமின்றி சர்வேதச வங்கி, சர்வதேச அரசியல் சூழல், அமெரிக்காவின் வங்கிகளின் வட்டி விகிதம் என்று பல்வேறு காரணங்களை முன் வைத்து தினமும் தங்கத்தின் விலையில் ஏற்றம் இறக்கம் காணப்பட்டு வருகிறது.
தற்போது இஸ்ரேல் - ஹமாஸ் இடையே உருவாகியுள்ள போரின் எதிரொலியாக சனிக்கிழமை அன்று தங்கம் விலை இரண்டு முறை அதிகரித்தது. அதைத் தொடர்ந்து திங்கள்கிழமை முதல் தங்கம் விலையானது தினமும் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த 2 வாரங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்தது.
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.304 அதிரடியாக உயர்ந்தது. இந்த தொடர் விலை உயர்வு நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. தங்கம் விலை கடந்த 4 நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. அக்டோபர் 6ஆம் தேதி அதிரடியாக குறைந்து, ரூ.42 ஆயிரத்து 280க்கு விற்பனை ஆனதைத் தொடர்ந்து, அதிரடியாக உயரத் தொடங்கியது. அதன்படி, இன்று 43 ஆயிரத்தைக் கடந்து விற்பனையாகி வருகிறது. இன்றைய நிலவரத்தில், தங்கம் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
தங்கம் கிராமுக்கு ரூ.38 அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் ரூ.5 ஆயிரத்து 410க்கும், சவரனுக்கு ரூ.304 உயர்ந்து சவரன் ரூ.43 ஆயிரத்து 280க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் உயர்ந்து ரூ.75.50க்கும் ஒரு கிலோ ரூ.500 உயர்ந்து 75 ஆயிரத்து 500க்கு விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் 24 கேரட் சுத்த தங்கமானது, இன்றைய விலையில் கிராமுக்கு ரூ.5 ஆயிரத்து 880 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய நிலவரம் (அக்டோபர் 12) :
- 1கிராம் தங்கம்(22கேரட்) - ரூ.5,410
- 1சவரன் தங்கம்(22கேரட்) - ரூ.43,280
- 1கிராம் தங்கம் (24-கேரட்) - ரூ.5,880
- 8 கிராம் தங்கம் (24-கேரட்) - ரூ47,040
- 1கிராம் வெள்ளி - ரூ.75.50
- 1-கிலோ வெள்ளி - ரூ.75,500