ETV Bharat / state

திடீரென குறைந்த தங்கத்தின் விலை! முதலீடுக்கு சரியான நேரமா?

Today Gold rate : கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிரிகத்து வந்த தங்கத்தின் விலை இன்று (அக். 25) சவரனுக்கு 160 ரூபாய் வரை குறைந்து உள்ளது. சவரன் தங்கம் 45 ஆயிரத்து 240 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

Today Gold rate
தங்கம் விலை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 25, 2023, 12:25 PM IST

சென்னை: இஸ்ரேல் போர் தாக்கத்தால் தங்கம் விலையில் தினமும் ஏற்றம், இறக்கம் காணப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ஒரு சவரன் ரூ.45 ஆயிரத்து 240க்கு விற்பனை ஆகின்றன. பொதுவாகவே தங்கத்தின் விலையானது சர்வதேசப் பொருளாதாரச் சூழலில் மத்தியில், கமாடிட்டி மார்க்கெட்டைப் பொறுத்து நிர்ணயம் செய்யப்படுகிறது.

இது மட்டுமின்றி சர்வவேதச வங்கி, சர்வதேச அரசியல் சூழல், அமெரிக்காவின் வங்கிகளின் வட்டி விகிதம் என பல்வேறு காரணங்களை முன்வைத்து தான் தங்கத்தின் விலையில் தினமும் ஏற்றம், இறக்கம் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே உருவாகியுள்ள போரின் எதிரொலியாகக் கடந்த 15 நாட்களாகத் தங்கத்தின் விலை தினமும் ஏற்றமும் இறக்கமுமாக இருந்து வருகிறது.

தொடர்ந்து இன்று (அக்.25) காலை காமிட்டி மார்க்கெட் தொடங்கிய நிலையில், சர்வதேச சந்தையில் தங்கம் விலை அவுன்ஸூக்கு $1,974.90 ஆக இருந்து வரும் நிலையில், இந்த விலையினால், இந்திய உள்நாட்டு சந்தையிலும் எதிரோலித்ததால், தங்கத்தின் விலையானது இன்று சவரனுக்கு 160 வரை குறைந்துள்ளது.

மேலும் சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.5 ஆயிரத்து 655க்கும், ஒரு சவரனுக்கு ரூ.160 குறைந்து, 22 கேரட் சவரன் ரூ.45 ஆயிரத்து 240க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறன. ஒரு கிராம் வெள்ளி விலை 50 காசுகள் குறைந்து, ரூ.77.50க்கும், ஒரு கிலோவிற்கு ரூ.500 குறைந்து, ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.77 ஆயிரத்து 500க்கும் விற்பனையாகிறது.

இன்றைய (அக்-25) நிலவரப்படி தங்கத்தின் விலை:

  • 1 கிராம் தங்கம் (22கேரட்) - ரூ.5,665
  • 1 சவரன் தங்கம் (22கேரட்) - ரூ.45,240
  • 1 கிராம் தங்கம் (24-கேரட்) - ரூ.6,125
  • 8 கிராம் தங்கம் (24-கேரட்) - ரூ.49,000
  • 1 கிராம் வெள்ளி - ரூ.77.50
  • 1 கிலோ வெள்ளி - ரூ.77,500

இதையும் படிங்க: இந்தியாவில் சாம்சங் 'கேலக்ஸி டேப் A9' டேப்லெட் அறிமுகம்.. சிறப்பம்சங்கள் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.