சென்னை: சர்வதேச பொருளாதார சுழ்நிலை, அரசியல், மற்றும் பல்வேறு காரணங்களால், தங்கத்தின் விலையானது சர்வதேச சந்தையில், நிர்ணயம் செய்யப்படுகிறது. இதனால் உள்நாட்டிலும் தங்கத்தின் விலையில் ஏற்றம் இறக்கம் இருக்கும்.
கடந்த ஒரு மாதம் காலமாக நடைபெற்று வரும் இஸ்ரேல் - ஹமாஸ் போரின் விளைவாக தங்கத்தின் முதலீடு அதிகமானதால், தங்கத்தின் விலை அதிகளவில் அதிகரித்ததும், ஒரு நாள் சிறு அளவு குறைந்தும் என ஏற்றம் இறக்கத்துடன் காணபட்டு வருகிறது. இந்நிலையில், சென்னையில் இன்று (நவ. 4) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று (நவ. 4) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.5 ஆயிரத்து 715க்கும், சவரனுக்கு ரூ.120 அதிகரித்து, ஒரு சவரன் தங்கம் ரூ.45 ஆயிரத்து 720க்கு விற்பனையாகிறது. மேலும் வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78க்கும், ஒரு கிலோவிற்கு ரூ.1000 அதிகரித்து, ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.78 ஆயிரத்திற்கும் விற்பனையாகி வருகிறது.
இன்றைய (நவ. 4) நிலவரப்படி தங்கத்தின் விலை:
- 1 கிராம் தங்கம்(22கேரட்) - ரூ.5,715
- 1 சவரன் தங்கம்(22கேரட்) - ரூ.45,720
- 1 கிராம் தங்கம் (24-கேரட்) - ரூ.6,185
- 8 கிராம் தங்கம் (24-கேரட்) - ரூ.49,480
- 1 கிராம் வெள்ளி - ரூ.78.00
- 1 கிலோ வெள்ளி - ரூ.78,000
இதையும் படிங்க: கரூரில் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக தொடரும் சோதனை!