தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாட்டில் இன்று (மே 13) புதிதாக 1 லட்சத்து 51 ஆயிரத்து 700 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 17,532 ஆண்கள், 13,089 பெண்கள் என மொத்தம் 30 ஆயிரத்து 621 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 2 கோடியே 41 லட்சத்து 54 ஆயிரத்து 769 பேருக்குக் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 14 லட்சத்து 99 ஆயிரத்து 485 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனாவுக்கு இன்று அரசு மருத்துவமனையில் 188 பேரும், தனியார் மருத்துவமனையில் 109 பேரும் என 297 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுவரை 16 ஆயிரத்து 768 பேர் கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
கரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 19,287 பேர் குணமடைந்தனர். இதுவரையில் 12 லட்சத்து 98 ஆயிரத்து 945 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கரோனா பாதிப்புடன் 1 லட்சத்து 83 ஆயிரத்து 772 பேர் சிகிச்சையில் உள்ளனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ’முதல் நாளே சித்த மருத்துவத்தை நாடுங்கள், ரெம்டெசிவிருக்காக காத்திருப்பதைத் தவிர்க்கலாம்’