ETV Bharat / state

சென்னை கிரைம்: கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் வீட்டுப் பத்திரம் மாயம்.. பெட்ரோல் பங்க் வசூல் பணத்துடன் தப்பிய ஊழியர்.. - நடந்து சென்ற நபரை முட்டி பதம் பார்த்த மாடு

Chennai Crime News: சென்னையில் நேற்று ( செப்.8) நிகழ்ந்த குற்றச்செய்திகள் குறித்த ஒரு சிறிய தொகுப்பைக் காணலாம்.

Chennai Crime News
சென்னை குற்றச்செய்திகள்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 9, 2023, 4:22 PM IST

Updated : Sep 9, 2023, 4:44 PM IST

சாலையில் நடந்து சென்ற நபரை முட்டி பதம் பார்த்த மாடு

சாலையில் நடந்து சென்ற நபரை முட்டி பதம் பார்த்த மாடு:

சென்னை: நங்கநல்லூர் பி.வி.நகரை சேர்ந்தவர் கண்ணன்(51). இவர் நேற்று முன்தினம் (செப்.6) அன்று இரவு 7.30 மணியளவில் கடைக்கு செல்வதற்காக நங்கநல்லூர் உழவர் சந்தை அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கே சாலையில் திரிந்த மாடுகளின் ஒன்று கண்ணனை முட்டியதில், இடது பக்க வயிற்றில் மாட்டின் கொம்பு குத்தி குடல் சரிந்தது.

Chennai incident
Chennai incident

இதைத் தொடர்ந்து, ரத்த வெள்ளத்தில் விழுந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தற்போது அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் நங்கநல்லூர் பகுதியில் மாடுகள் தொல்லை அதிகமாக இருப்பதாகவும், அதனைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Dinesh kartik
Dinesh kartik

பிரபல கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் வீட்டின் பத்திரம் மாயம் என புகார்:

சென்னை: பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தேனாம்பேட்டை அடுத்த போயஸ் கார்டன் பகுதியில், தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு சொந்தமான நிலம் ஒன்று அப்பகுதியில் இருந்துள்ளது. அதற்குண்டான சொத்து ஆவணங்களை அப்பகுதியில் உள்ள ஜெராக்ஸ் கடை ஒன்றில் நகல் எடுப்பதற்காக கொண்டு சென்றுள்ளார்.

அப்போது அவர் காரில் கொண்டு சென்ற சொத்து ஆவணங்கள் திடீரென மாயமாகியுள்ளது. இதையடுத்து வீடு, அவர் சென்ற இடம் என அனைத்து இடத்திலும் தேடியுள்ளார். ஆனால் எங்கு தேடியும் கிடைக்காததால், இது குறித்து அருகில் உள்ள தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தற்போது தினேஷ் கார்த்திக் அளித்த அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல நடிகர் ராம்கி அவர்களது வீட்டின் சொத்து ஆவணங்கள் மாயமானதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது. இது பிரபலங்களிடம் திட்டமிட்டு செய்யப்படும் குற்றச்செயல்களா இல்லை வேறு ஏதும் பிண்ணனி உள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெட்ரோல் பங்கில் வசூலான பணத்துடன் தப்பி ஓடிய ஊழியர்:

சென்னை: அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் கிங்ஸ்லி ஜோ. இவர் அரும்பாக்கம் 100 அடி சாலையில் சொந்தமாக பெட்ரோல் பங்க் ஒன்றை நடத்தி வருகின்றார். இவரது பெட்ரோல் பங்கில் திருச்சியை சேர்ந்த பாஸ்கர் என்கிற நல்லசாமி(22) என்பவர் கடந்த 6 மாதங்களாக பணியாற்றி வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் (செப்.6) ஆம் தேதி காலை பணியில் இருந்த நல்லசாமி இரவு வேலை முடிந்து கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் திரும்பி வரவில்லை என தெரிகிறது. இதனால் சந்தேகமடைந்த மற்ற ஊழியர்கள், உடனே பெட்ரோல் பங்க் உரிமையாளர் கிங்ஸ்லிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அங்கு வந்த கிங்ஸ்லி வசூலான பணத்தை எண்ணிப் பார்க்கும் பொழுது அதில் 50 ஆயிரம் பணம் குறைவாக இருந்துள்ளது.

இதனையடுத்து கிங்ஸ்லி அரும்பாக்கம் காவல் நிலையத்தில் தனது ஊழியர் பணத்தை திருடிவிட்டு தப்பியோடிவிட்டதாக புகார் அளித்துள்ளார். தற்போது அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பணத்துடன் தப்பி ஓடிய நல்லசாமியை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: G20 Summit: தமிழர் பெறுமை பறைசாற்றும் தஞ்சாவூர் ஓவியக் கூடம்! பாரத் மண்டபத்தை அலங்கரிக்கிறது!

Last Updated : Sep 9, 2023, 4:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.