சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 73 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஆயிரத்து 929 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 3 கோடியே 79 லட்சத்து 72 ஆயிரத்து 729 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதில் இதுவரை 25 லட்சத்து 77 ஆயிரத்து 237 நபர்களுக்கு கரோனா தொற்றுப் கண்டறியப்பட்டது. தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்ட 20 ஆயிரத்து 427 பேர், மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கரோனாவால் 23 பேர் உயிரிழப்பு
இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 22 ஆயிரத்து 470 ஆக உயர்ந்துள்ளது. தனியார், அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த கரோனா நோயாளிகளில் 23 பேர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 340 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு
சென்னை - 5,39,856
கோயம்புத்தூர் - 2,31,405
செங்கல்பட்டு - 1,63,031
திருவள்ளூர் - 1,14,280
சேலம் - 94,145
திருப்பூர் - 88,596
ஈரோடு - 95,245
மதுரை - 73,694
காஞ்சிபுரம் - 72,066
திருச்சிராப்பள்ளி - 73,065
தஞ்சாவூர் - 68,802
கன்னியாகுமரி - 60,391
கடலூர் - 61,073
தூத்துக்குடி - 55,244
திருநெல்வேலி - 48,111
திருவண்ணாமலை - 52,478
வேலூர் - 48,287
விருதுநகர் - 45,609
தேனி - 43,016
விழுப்புரம் - 44,137
நாமக்கல் - 47,687
ராணிப்பேட்டை - 42,119
கிருஷ்ணகிரி - 41,590
திருவாரூர் - 38,244
திண்டுக்கல் - 32,305
புதுக்கோட்டை - 28,459
திருப்பத்தூர் - 28,387
தென்காசி - 26,914
நீலகிரி - 30,956
கள்ளக்குறிச்சி - 29,447
தருமபுரி - 26,363
கரூர் - 22,800
மயிலாடுதுறை - 21,273
ராமநாதபுரம் - 20,101
நாகப்பட்டினம் - 18,997
சிவகங்கை - 18,980
அரியலூர் - 15,995
பெரம்பலூர் - 11,563
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1,018
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,080
ரயில் மூலம் வந்தவர்கள் - 428
இதையும் படிங்க: கோமாவில் உள்ள இளைஞர் சிகிச்சைக்கு செவிசாய்க்குமா அரசு?