சென்னை: சட்டப்பேரவையில் இன்று (ஏப்ரல் 25) கேள்வி நேரத்தில், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி எம்எல்ஏ ஈ.ஆர். ஈஸ்வரன், "தமிழ்நாடு முழுவதும் கரோனா காலகட்டத்தில் பல்வேறு வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டது. பள்ளிகள், கல்லூரிகள் தற்போது திறக்கப்பட்டுள்ளதால் மீண்டும் அந்த வழித்தடங்களில் பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், ’நிறுத்தப்பட்ட வழித்தடங்களில் மீண்டும் பேருந்துகள் இயக்குவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும், விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ எனவும் உறுதியளித்தார்.
மேலும், ’மினி பேருந்துகள் இயக்கம் குறித்து, மினி பேருந்துகள் உரிமையாளர் சங்கத்தினர் மனு அளித்துள்ளனர். அது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் போக்குவரத்துத் துறையில் எடுக்கப்பட்டு வருகிறது’ என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பேரவையில் துணைவேந்தர் நியமன மசோதா நிறைவேற்றம் - அதன் பயன்கள் என்ன?