ETV Bharat / state

"போகியின்போது தேவையற்ற பொருட்களை எரிக்க வேண்டாம், எங்களிடம் தாருங்கள்" - தாம்பரம் மாநகராட்சி!

போகிப் பண்டிகையின்போது சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தவிர்க்க, தேவையில்லாத பழைய பொருட்களை எரிக்காமல், மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என தாம்பரம் மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

avoid
avoid
author img

By

Published : Jan 8, 2023, 8:19 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் வரும் 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. பொங்கலை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் போகிப் பண்டிகையின்போது சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதைத் தவிர்க்க தாம்பரம் மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, போகியின்போது பொதுமக்கள் எரிக்கப்போகும் பழைய துணி, டயர், ரப்பர் ட்யூப், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்டவற்றை சேகரிக்க முடிவு செய்தது. அதற்காக, தாம்பரம் மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் இடம் தேர்வு செய்து, பொதுமக்களிடமிருந்து பழைய பொருட்களை வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நமது சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக, மக்கள் தேவையில்லாத பழைய பொருட்களை எரிப்பதைத் தவிர்த்து, அவற்றைத் தரம் பிரித்து மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களிடம் வரும் 14ஆம் தேதி வரை வழங்கி, புகையில்லா மற்றும் காற்று மாசில்லா போகிப் பண்டிகையை கொண்டாடும்படி தாம்பரம் மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: போதையில்லா தமிழ்நாடு தீம்: 500-க்கும் மேலான வின்டேஜ் பைக்குகளில் பேரணி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.