தமிழ்நாடு காவல் துறை, சிறை துறை, தீயணைப்புத்துறையில் காலியாக உள்ள 11 ஆயிரத்து 813 இடங்களுக்கான எழுத்து தேர்வு கடந்த டிசம்பர் மாதம் 13ஆம் தேதி நடைபெற்றது.
இந்தத் தேர்வை 5 லட்சத்து 50 ஆயிரத்து 314 பேர் எழுதினர். இந்த எழுத்து தேர்வுக்கான முடிவை சீருடை பணியாளர் தேர்வாணையம் கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி வெளியிட்டது. எழுத்து தேர்வில் வெற்றி பெற்ற நபர்களுக்கு அடுத்த கட்டமாக சான்றிதழ் சரிப்பார்த்தல், உடற்கூறு அளத்தல், உடற்திறன் போட்டி ஆகியவை நடைபெறவுள்ளன.
இந்த தேர்வு 1:5 விகிதத்தில் வருகிற ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெறும் என சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால், பாதுகாப்பு பணி காரணமாக உடற்தகுதி தேர்வை வரும் ஏப்ரல் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளதாக சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க:பயிற்சி மருத்துவர்களின் உழைப்பை சுரண்டுவதா? மருத்துவர்கள் போராட்டம்