ETV Bharat / state

TNTET Answer Key: ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2 தற்காலிக விடைக் குறிப்பு வெளியீடு!

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்விற்கான தாள் 2 எழுதியவர்களுக்கான உத்தேச விடைக் குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

TNTET Answer Key:ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2- தற்காலிக விடைக் குறிப்பு வெளியீடு

author img

By

Published : Feb 22, 2023, 7:09 PM IST

சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2021இல் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தகுதித்தேர்விற்கு உரிய தாள் 2க்கான தேர்வுகள் கம்ப்யூட்டர் மூலம் பிப்ரவரி 3 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரையிலும் நடத்தப்பட்டது. தற்போது தேர்வுக்கான கேள்விகளுக்கு உரியத் தற்காலிக உத்தேச வினைக்குறிப்புகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான www.tn.nic.in வெளியிடப்பட்டுள்ளன.

தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேதியில் எந்த அமர்வில் தேர்வு எழுதியவர்களோ அந்த அமர்வுக்கு உரிய Master Quotion Paper TRB இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் வெளியிடப்பட்டுள்ள தற்காலிக விடைக்குறிப்பிற்கு இணையவழியில் ஆட்சேபனை தெரிவிக்கும் போது உரிய வழிமுறைகளைத் தவறாமல் பின்பற்றி அதற்குரிய சான்றாவணங்களை இணைக்க வேண்டும். சான்றாவணங்கள் இணைக்கப்படாத முறையீடுகள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது இவையனைத்தும் முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.

மேலும், ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள தற்காலிக உத்தேச விடைக்குறிப்பின் மீது தேர்வர்கள் ஆட்சேபனை தெரிவிக்க விரும்புவோர் பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி மாலை 5.30 மணி வரையில் மட்டும் ஆதாரங்களுடன் பதிவு செய்திடல் வேண்டும் அங்கீகரிக்கப்பட்ட பாட புத்தகங்கள் ஆதாரம் மட்டுமே அளிக்க வேண்டும்.

கையேடுகள் ஆதாரங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. தபால் அல்லது பிறவழி முறையீடுகள் ஏற்கப்பட மாட்டாது. அவை நிராகரிக்கப்பட்டதாகக் கருதப்படும். ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2 எழுதுவதற்கு 38 மாவட்டங்களிலும் 188 இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டு, 4 லட்சத்து ஒரு ஆயிரத்து 856 பேர் எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:"ரவி சார் நீங்க சங்கி அல்ல அறிவாளி" - காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.