ETV Bharat / state

சென்னை - பம்பை பேருந்து வசதி.. ஐயப்ப பக்தர்களுக்காக சிறப்பு ஏற்பாடு!

சபரிமலை செல்வோரின் வசதிக்காக சென்னை - பம்பை இடையே நவம்பர் 17ம் தேதி முதல் விரைவு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

சென்னை - பம்பை பேருந்து வசதி.. ஐயப்ப பக்தர்களுக்காக சிறப்பு ஏற்பாடு!
சென்னை - பம்பை பேருந்து வசதி.. ஐயப்ப பக்தர்களுக்காக சிறப்பு ஏற்பாடு!
author img

By

Published : Nov 14, 2022, 8:00 PM IST

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனத்தை காண தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் செல்வது வழக்கம். இந்நிலையில் பக்தர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து பம்பை வரை நவம்பர் 17ம் தேதி முதல் விரைவு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

அதன்படி, சென்னையில் இருந்து பம்பைக்கு பிற்பகல் 3.30 மணி மற்றும் 4 மணி என இரு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதில் பெரியவர்களுக்கு ரூ.1090, சிறியவர்களுக்கு ரூ.545 கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது. இந்த அதி நவீன மிதவை சொகுசு பேருந்து சேவை வரும் ஜனவரி 18ம் தேதி வரை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

பேருந்துகளின் இருக்கைகளை, www.tnstc.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதேபோல், சென்னையில் இருந்து குமுளிக்கு மாலை 5.30 மணிக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்தையும் பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பெரியவர்களுக்கு ரூ.575, சிறியவர்களுக்கு ரூ.288 கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது.

இதையும் படிங்க: கைலாசாவில் வேலைவாய்ப்பு.. குவியும் அப்ளிகேஷன்.. போலீசார் விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.