குரூப் 2 முதல்நிலைத் தேர்வில் தமிழை மீண்டும் சேர்க்கக் கோரியும், முதன்மைத் தேர்வில் மொழிபெயர்ப்பை நீக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையச் செயலாளரை சந்தித்து டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் இன்று மனு அளித்தனர்.
இது குறித்து பேசிய குரூப் 2 தேர்வுக்குத் தயாராகிவரும் தனவீர பாண்டியன், "குரூப் 2 தேர்வுக்கு மொத்தம் 12 லட்சம் பேர் முயற்சி செய்துவருகின்றனர். மொத்தமுள்ள 200 மதிப்பெண்களில் தமிழ் பாடம் சார்ந்த 100 மதிப்பெண்கள் நீக்கப்பட்டுள்ளன. இதனால் கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். மொழியையும், அது சார்ந்த இலக்கணத்தையும் நீக்கக் கூடாது.
சிறந்த பணியாளர்களைத் தேர்வுசெய்ய அரசு முயற்சி செய்வது வரவேற்கத்தக்கது. ஆனால் மொழியை அழித்து இம்முயற்சியை மேற்கொள்ள முயல்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. மொழிபெயர்ப்பு செய்வதற்கென்று தனியாக பணியாளர்கள் உள்ளனர். அப்படி எல்லா பணியாளர்களுக்கும் மொழிபெயர்ப்புத் திறன் அவசியம் என்றால், பணியில் எடுத்த பின்பு அவர்களுக்கு அரசாங்கம் பயிற்சி கொடுக்கலாம்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: