சென்னை : டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு 2 (குருப்-2 மற்றும் குருப்- 2ஏ) முதல் நிலைத் தேர்வு ஆகியவற்றிக்கான பாடத்திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கட்டாயம் தமிழ் மற்றும் மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தினை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
இது குறித்து அதன் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கட்டாயத் தமிழ்மொழித் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு (கொள்குறி வகை) குருப் 3, குருப் 4, குருப் 7பி, குருப் 8, சிறை அலுவலர், உதவி சிறை அலுவலர், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு 2 (குருப் 2 மற்றும் குருப் 2 ஏ) முதல் நிலைத் தேர்வு ஆகியவற்றிக்கான பாடத்திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்தாண்டு (2021) ஜூலை மாதம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் இனி தமிழுக்கு முதலிடம் கொடுக்கப்படும் என அறிவிப்பு வௌியானது. தமிழ்நாடு அரசால் ஏற்படுத்தப் பெற்ற இத் தேர்வாணையம் ஒரு தலைவர், மற்றும் குறிப்பிட்ட அளவிலான உறுப்பினர்களைக் கொண்டு செயல்படுகிறது.
இவர்களின் பணிவிதிகள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒழுங்குமுறை சட்டம் 1954 கீழ் வரையறுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் என்பது தமிழ்நாடு அரசுப் பணிக்குத் தேவையானவர்களை தகுந்த போட்டித் தேர்வுகள் வாயிலாகத் தேர்வு செய்ய ஏற்படுத்தப்பெற்ற அரசு சார்ந்த அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : TNPSC Exams: ஆராய்ச்சி உதவியாளர் எழுத்துத்தேர்வுக்கு ஹால்டிக்கெட் வெளியீடு