சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் பணிபுரியும் பணியாளர்கள் ஒரு நாள் ஊதியத்தை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர். தேர்வாணையத்தலைவர் கா. பாலச்சந்திரன், நிவாரண நிதியை முதலமைச்சரிடம் வழங்கினார்.
அப்போது, தேர்வாணைய உறுப்பினர்கள் பெ. கிருஷ்ணகுமார், ஏ.வி. பாலுசாமி, தேர்வாணைய செயலாளர் உமா மகேஷ்வரி, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: முதலமைச்சர் நிவாரண நிதி: உதவித்தொகையை அளித்த ஆதரவற்ற மூதாட்டி