ETV Bharat / state

TNPSC Group4: காலிப்பணியிடங்கள் 10,117ஆக அதிகரிப்பு - அது எப்படி? - Education news

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலிப்பணியிடங்கள் 7,301இல் இருந்து 10,117ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Group4: காலிப்பணியிடங்கள் 10,117 ஆக அதிகரிப்பு!

author img

By

Published : Mar 22, 2023, 10:07 PM IST

சென்னை: தமிழ்நாடு அரசின் கீழ் வரும் பல்வேறு துறைகளுக்கு ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 4 தேர்வுக்கு, அதிகமானோர் ஒவ்வொரு முறையும் தயாராகி வருகின்றனர். காரணம், இதற்கான அதிகபட்ச கல்வித் தகுதி என்பது 10ஆம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே.

இந்த குரூப் 4 தேர்வில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித்தண்டலர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் பண்டகக் காப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். இந்த நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டின் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு மொத்தம் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் குரூப் 4 பிரிவில் 7,138 பணியிடங்கள் மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கீழ் உள்ள பல்வேறு வாரியங்களில் 163 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன.

இவ்வாறாக மொத்தம் 7,301 காலிப் பணியிடங்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இவற்றில் 3 சதவீதம் பேர் விளையாட்டு வீரர்கள் பிரிவில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தத் தேர்வுக்கு 21 லட்சத்து 85 ஆயிரத்து 328 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து இதற்கான தேர்வு கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதி நடைபெற்றது. இதனை 18 லட்சத்து 36 ஆயிரத்து 535 தேர்வர்கள் எழுதினர்.

பின்னர் இதற்கான தேர்வு முடிவுகள், கடந்த அக்டோபர் மாதமே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன் பிறகு டிசம்பர், பிப்ரவரி என தொடர்ந்து கொண்டே வந்தது. இதனிடையே கடந்த மார்ச் 8ஆம் தேதி #WeWantGroup4Results என்ற ஹேஸ்டேக் சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டரில் டிரெண்டாகத் தொடங்கியது. இந்த நிலையில் மீண்டும் ஒரு அப்டேட்டை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கொடுத்துள்ளது.

இதன்படி முன்னதாக அறிவிக்கப்பட்ட 7,301 ஆக இருந்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை, தற்போது 10,117 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, கிராம நிர்வாக அலுவலர் மற்றும் குரூப் 4 அட்டவணையின்படி, 7,138 காலிப் பணியிடங்களில் இருந்து 9,865 காலிப் பணியிடங்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் பல்வேறு வாரியங்கள் மற்றும் மாநில துறைகளின் கீழ் உள்ள பல பதவிகளுக்கு அறிவிக்கப்பட்ட 163 காலிப்பணியிடங்கள் தற்போது 252 காலிப் பணியிடங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, மொத்தம் 7,301ஆக இருந்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை, தற்போது 10,117ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் முதன் முறையாக பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிய தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் குரூப் 4 பணியிடங்களுக்கான பணியாளர்களை தேர்வு செய்து அளிக்கின்றனர். அதேநேரம் பொதுத்துறை நிறுவனங்களில் பணியில் சேர்பவர்களுக்கு ஓய்வூதியம், புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் காப்பீட்டுக் கழக ஓய்வூதியத் திட்டத்தின்மூலம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: TNPSC குரூப்-4 தேர்வு முடிவு எப்போது? - ட்விட்டரில் டிரெண்டாகும் #WeWantGroup4Results

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.