ETV Bharat / state

'குரூப்-1 தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்' - குரூப் தேர்வு அறிவிப்புகள்

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நிரப்பப்படும் சில பணியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

tnpsc
tnpsc
author img

By

Published : Jan 19, 2020, 6:25 PM IST

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் காவல் துணைக் கண்காணிப்பாளர், வணிகவரித்துறை உதவி ஆணையர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கு ஜனவரி 20ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்-1 பணியில் அடங்கிய காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வரும் 20ஆம் தேதி வெளியிடுகிறது. தேர்வர்கள் ஜனவரி 20ஆம் தேதி முதல் பிப்ரவரி 19ஆம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி நடத்தப்படும்.

குரூப்-1 தேர்விற்கான தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீட்டு விபரங்கள், தேர்வு முறைகள் உள்ளிட்ட விபரங்கள் வரும் 20ஆம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in, www.tnpsc.exam.net, www.tnpsc.exam.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்' எனக் கூறியுள்ளார்.

மேலும் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர், வணிக வரித் துறை உதவி ஆணையர் உள்ளிட்ட பணியிடங்கள் இந்த ஆண்டிற்கான அறிவிப்பில் இடம் பெறுகிறது. இந்த ஆண்டில் நிரப்பப்பட உள்ள பணியிடங்கள் விபரம் முழுவதும் 20ஆம் தேதி அறிவிக்கப்படும். இந்த ஆண்டிலேயே குரூப்-1 தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் குரூப்-1 தேர்வில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், இந்தாண்டு முதல் பாடத்திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: குரூப் 4 தேர்வு முறைகேடு சர்ச்சை - விடிய விடிய விசாரணை

Intro:

குருப் 1 தேர்வு நாளை முதல் விண்ணப்பம் Body:

குருப் 1 தேர்வு நாளை முதல் விண்ணப்பம்
சென்னை,

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் துணை காவல்துறை கண்காணிப்பாளர், வணிகவரித்துறை உதவி ஆணையர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கு ஜனவரி 20 ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குருப் 1 பணியில் அடங்கிய காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வரும் 20 ந் தேதி வெளியிடுகிறது. தேர்வர்கள் ஜனவரி 20 ந் தேதி முதல் பிப்ரவரி 19 ந் தேதி வரையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு ஏப்ரல் மாதம் 5 ந் தேதி நடத்தப்படும்.

குருப் 1 தேர்விற்கான தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீட்டு விபரங்கள், தேர்வு முறைகள் உள்ளிட்ட விபரங்கள் வரும் 20 ந் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in, www.tnpsc.exam.net, www.tnpsc.exam.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என அதில் கூறியுள்ளார்.

மேலும் துணை காவல்துறை கண்காணிப்பாளர், வணிகவரித்துறை உதவி ஆணையர் உள்ளிட்ட பணியிடங்கள் இந்த ஆண்டிற்கான அறிவிப்பில் இடம் பெறுகிறது. இந்த ஆண்டில் நிரப்பப்பட உள்ள பணியிடங்கள் விபரம் முழுவதும் 20 ந் தேதி அறிவிக்கப்படும். இந்த ஆண்டிலேயே குருப் 1 தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளது.

மேலும் குருப் 1 தேர்வில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்தாண்டு முதல் பாடத்திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.