ETV Bharat / state

தொடரும் முறைகேடு சர்ச்சை: டிஎன்பிஎஸ்சி விளக்கம்! - group 2 exam Affair

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் வெற்றிபெற்றவர்கள் அனைவரும் தேர்வு குறித்து அறிவிப்பு நாளில் சான்றிதழ்கள் வைத்துள்ளனர் என்பது உறுதியாகி உள்ளது.

டிஎன்பிஎஸ்சி விளக்கம்
டிஎன்பிஎஸ்சி விளக்கம்
author img

By

Published : Feb 8, 2020, 8:14 PM IST

2018ஆம் ஆண்டில் 1,334 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 2 முதல் நிலைத் தேர்வு நடத்தப்பட்டது. இதில் ஆறு லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். 2019 நவம்பர் 23ஆம் தேதி முதன்மை தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் 17ஆம் தேதி வெளியானது.

2018ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 2 தேர்வில் கல்லூரியில் பயின்று கொண்டிருக்கும் போதே மூன்று கட்டத் தேர்வுகளில் 500க்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றிருப்பது முறைகேடு நடந்திருக்கும் என்கிற சந்தேகத்திற்கு வழி வகுத்தது.

2018ஆம் ஆண்டு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போதே பட்டப்படிப்பு முடித்து அதற்கான சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டும் என்பது விதியாகும். 1997 மற்றும் 1998ஆம் ஆண்டுகளில் பிறந்து பொறியியல் பயிலும் மாணவர்கள் பட்டப்படிப்பு முடித்து சான்றிதழ்களை வைத்திருக்க சாத்தியமில்லை. கலை மற்றும் அறிவியல் பிரிவில் பயிலும் மாணவர்கள் மட்டுமே பட்டப்படிப்பு முடித்து சான்றிதழ்களை குறிப்பிட்ட 2018ஆம் ஆண்டில் வைத்து இருக்க வாய்ப்புள்ளது.

தற்போது எழுந்திருக்கும் குற்றச்சாட்டில் 2018ஆம் நடந்த குரூப் 2 தேர்வில் அனைத்து மாணவர்களும் கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் படித்தவர்களாக இருக்க வாய்ப்பில்லை என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.

குரூப் 2 நேர்முகத் தேர்வின் பொழுது 20 வயது நிரம்பியவர்கள் நேர்முகத் தேர்வில் முழு மதிப்பெண்கள் பெறுவது என்பது மிகக் கடினமான ஒன்று. ஏனென்றால் ஐந்து வருடம் போட்டித் தேர்வுக்கு பயிலும் 26, 27 வயது உடையவர்களே நேர்முகத் தேர்வில் முழு மதிப்பெண்கள் பெறுவது என்பது கடினமான ஒன்று என்ற கருத்து தேர்வர்கள் மத்தியில் நிலவியது.

இது குறித்து விசாரணை நடத்திய தேர்வாணையம், அவ்வாறு யாரும் தேர்வு எழுதவில்லை என்பதை உறுதிப்படுத்தி உள்ளது. மேலும் தேர்வு விண்ணப்பம் அறிவிக்கும் நாளில் 21 வயது முடிவடைந்திருக்க வேண்டும்.

பட்டப்படிப்பு முடித்ததற்கான சான்றிதழ் அல்லது இறுதித் தேர்வு மதிப்பெண் பட்டியல் அல்லது தற்காலிக பட்டப்படிப்பு சான்றிதழ் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை வைத்திருக்க வேண்டும் என்ற அடிப்படையில் தேர்வில் வெற்றிபெற்றவர்கள் அனைவரும் தேர்வு குறித்து அறிவிப்பு நாளில் சான்றிதழ்கள் வைத்துள்ளனர் என்பது உறுதியாகி உள்ளது.

இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி முறைகேடு எதிரொலி: தேர்வு முறையில் அதிரடி மாற்றங்கள்!

Intro:Body:

டிஎன்பிஎஸ்சி தேர்வில் 1997ல் பிறந்தவர்கள் 

விதிகள் அடிப்படையில் அனுமதி

டிஎன்பிஎஸ்சி விளக்கம்

சென்னை,

 டி.என்.பி.எஸ்.சியால் நடத்தப்படும் தேர்வுகளில் சார் பதிவாளர், ஊழல் தடுப்பு பிரிவு சிறப்பு உதவியாளர், நகராட்சி ஆணையர்,  தணிக்கை ஆய்வாளர்,கைத்தறி ஆய்வாளர், கூட்டுறவு ஆய்வாளர் என 23  பொறுப்புகளில் அமர வேண்டுமானால் குரூப் 2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற வேண்டும்.

2018 ஆம் ஆண்டில் 1,334 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 2 முதல் நிலைத் தேர்வு நடத்தப்பட்டது, இதில் 6 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். 2019 நவம்பர் 23 ந்தேதி முதன்மை தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் 17ந்தேதி வெளியானது.

2018ம் ஆண்டு நடைபெற்ற குரூப் 2 தேர்வில் கல்லூரியில் பயின்று கொண்டிருக்கும் போதே முதல்நிலை, 

 பிரதான,ஆகிய 3 கட்ட  தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள்

500க்கும் அதிகமானோர் தேர்சி பெற்றிருப்பது முறைகேடு நடந்திருக்கும் என்கிற  சந்தேகத்திற்கு வழி வகுத்துள்ளது.

97மற்றும் 98 ஆம் ஆண்டுகளில் பிறந்தோர் 2018 ஆம் ஆண்டு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போதே பட்டப்படிப்பு முடித்து அதற்கான சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டும் என்பது விதியாகும்.

 97 மற்றும் 98 ஆம் ஆண்டுகளில் பிறந்து பொறியியல் பயிலும் மாணவர்கள்  2018 ஆம் ஆண்டு பட்டப்படிப்பு முடித்து சான்றிதழ்களை வைத்திருக்க சாத்தியமில்லை.

கலை அறிவியல் பிரிவில் பயிலும் மாணவர்கள் மட்டுமே  பட்டப்படிப்பு முடித்து சான்றிதழ்களை குறிப்பிட்ட 2018 ஆம் ஆண்டில் வைத்து இருக்க வாய்ப்புள்ளது.

தற்போது எழுந்திருக்கும் குற்றச்சாட்டில் 2018ம் நடந்த  குரூப்  2 தேர்வில் அனைத்து மாணவர்களும் கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் படித்தவர்களாக இருக்க வாய்ப்பில்லை என்ற கருத்து முன்வைக்கப்படுகின்றது.

குரூப் 2 நேர்முகத் தேர்வின் பொழுது 20 வயது நிரம்பியவர்கள் நேர்முகத் தேர்வில் முழு மதிப்பெண்கள் பெறுவது என்பது மிக கடினமான ஒன்று.

ஏனென்றால் 5 வருடம்  போட்டி தேர்வுக்கு  பயிலும் 26 மற்றும் 27 வயது உடையவர்களே நேர்முகத் தேர்வில் முழு மதிப்பெண்கள் பெறுவது என்பது கடினம் என்கிற நிலையில், 20 வயதில் நேர்முகத் தேர்வில் முழு மதிப்பெண்கள் பெறும் அளவுக்கு கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் அந்த மாணவர்கள் தயாராவது கடினமான ஒன்று என்ற கருத்து தேர்வர்கள் மத்தியில் நிலவுகிறது.

இது குறித்து தேர்வாணையம் நடத்திய விசாரணையில் அவ்வாறு யாரும் தேர்வு எழுதவில்லை என்பதை உறுதிப்படுத்தி உள்ளது. மேலும் 21 வயது அறிவிப்பு நாளில் முடிவடைந்து இருக்க வேண்டும்.

பட்டப்படிப்பு முடித்ததற்கான சான்றிதழ் அல்லது இறுதித் தேர்வு மதிப்பெண் பட்டியல் அல்லது தற்காலிக பட்டப்படிப்பு சான்றிதழ் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை வைத்திருக்க வேண்டும்.

தேர்வில் வெற்றிப்பெற்றவர்கள் அனைவரும் இந்த சான்றிதழ் அறிவிப்பு நாளில்  வைத்துள்ளனர் என்பது உறுதியாகி உள்ளது என தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.