தமிழ்நாட்டில் கரோனா பரவல் கடந்த சில நாள்களாக உச்சத்தில் உள்ளது. வைரல் பரவலைக் கட்டுப்படுத்த, வரும் 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, குரூப் 1-க்கான முதன்மைத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது குறித்து வெளியான செய்தியில், “கரோனா பரவல் காரணமாக, மே 28,29,30 ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த குரூப் - 1 முதன்மை தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது. அதே போல ஜூன் 6 இல் நடக்கவிருந்த ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணி பதவிக்கான தேர்வும் ஒத்திவைக்கப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, ஜூன் 5 இல் நடக்கவிருந்த ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் சேருவதற்கான நுழைவுத் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.