ETV Bharat / state

குரூப்-1 தேர்வு ரத்து செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி!

சென்னை: டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 1 தேர்வை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

petition
author img

By

Published : Jul 8, 2019, 11:36 PM IST

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற குரூப்-1 முதல்நிலை தேர்வில் கேட்கப்பட்ட150 கேள்விகளுக்கு சரியான விடைகளை தெரிந்து கொள்ளும் வகையில் வெளியிடப்பட்ட மாதிரி விடைத்தாளில் 18 விடைகள் தவறானவை என புகார் எழுந்தது. இதையடுத்து, குரூப்-1 தேர்வை ரத்து செய்யக்கோரி விக்னேஷ் என்ற விண்ணப்பதாரர் தொடர்ந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

முன்னதாக, தேர்வில் கேட்கப்பட்ட150 கேள்விகளில் 24 கேள்விகள் தவறானவை என டிஎன்பிஎஸ்சி தரப்பில் ஒப்பு கொள்ளப்பட்டது. இதற்கான மதிப்பெண்களை தேர்வு எழுதியவர்களுக்கு வழங்கப்பட்டு விட்டதாகவும் விளக்கமளித்திருந்தது. இந்நிலையில், இந்த வழக்கின் இறுதி விசாரணையில் வழக்கு தொடர்ந்த விக்னேஷின் மதிப்பெண் பட்டியலை மூடி முத்திரையிடப்பட்ட உறையில் டிஎன்பிஎஸ்சி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.

31 பதவிக்கான இந்த தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் 1550 பேர் பிரதான தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள் என தெரிவித்த டிஎன்பிஎஸ்சி, தவறான கேள்விகளுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டும் மனுதாரர் இதில் தேர்ச்சி பெறவில்லை என்பதால் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தேர்வு எழுதிய ஒருவர் தொடர்ந்த வழக்கில் தற்போது தீர்வு காணப்பட்டுள்ள நிலையில், இதனை பொது நல வழக்காக கருதி ஒட்டுமொத்த தேர்வு நடைமுறைகள் தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி பார்த்திபன், தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தின் அறிக்கை அடிப்படையில் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

Intro:Body:டி.என்.பி.எஸ்.சி நடத்திய குரூப் 1 தேர்வை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற குரூப் 1 முதல்நிலை தேர்வில் கேட்கப்பட்ட 150 கேள்விகளுக்கு சரியான விடைகளை தெரிந்து கொள்ளும் வகையில் வெளியிடப்பட்ட மாதிரி விடைத்தாளில் 18 விடைகள் தவறானவை என புகார் எழுந்தது.

இதையடுத்து, குரூப் 1 தேர்வை ரத்து செய்யக்கோரி விக்னேஷ் என்ற விண்ணப்பதாரர் தொடர்ந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன்பு விசாரணையில் உள்ளது.

முன்னதாக, தேர்வில் கேட்கப்பட்ட 150 கேள்விகளில் 24 கேள்விகள் தவறானவை என டி.என்.பி.எஸ்.சி தரப்பில் ஒப்பு கொண்டிருந்தது. இதற்கான மதிப்பெண்களை தேர்வு எழுதியவர்களுக்கு வழங்கப்பட்டு விட்டதாகவும் விளக்கமளித்திருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கின் இறுதி விசாரணையில், வழக்கு தொடர்ந்த விக்னேஷின் மதிப்பெண் பட்டியலை மூடி முத்திரையிடப்பட்ட உறையில் டி.என்.பி.எஸ்.சி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.

31 பதவிக்கான இந்த தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் 1550 பேர் பிரதான தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள் என தெரிவித்த டி.என்.பி.எஸ்.சி, தவறான கேள்விகளுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டும் மனுதாரர் இதில் தேர்ச்சி பெறவில்லை என்பதால் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தேர்வு எழுதிய ஒருவர் தொடர்ந்த வழக்கில் தற்போது தீர்வு காணப்பட்டுள்ள நிலையில், இதனை பொது பல வழக்காக கருதி ஒட்டுமொத்த தேர்வு நடைமுறைகள் தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி பார்த்திபன், தமிழ்நாடு அரசு பணியாளிர்கள் தேர்வாணையத்தின் அறிக்கை அடிப்படையில் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.